தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கட்டுப்பாடு:சவூதி தொழில் துறை அமைச்சகம் விளக்கம்

Go down

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கட்டுப்பாடு:சவூதி தொழில் துறை அமைச்சகம் விளக்கம்  Empty வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கட்டுப்பாடு:சவூதி தொழில் துறை அமைச்சகம் விளக்கம்

Post by முஸ்லிம் Thu Jun 02, 2011 4:30 pm

தம்மாம்:சவூதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்களின் பணிக்காலத்தை ஆறு ஆண்டுகளாக குறைக்கப் போவதாக வெளியான செய்தி தவறு என அந்நாட்டு தொழில் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. சவூதியில் 6 வருடம் பணிபுரிந்த வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு இகாமா (அடையாள அட்டை) புதுப்பித்து வழஙகப்படாது என தொழில்துறை அமைச்சர் ஆதல் பாகிஹை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதுத்தொடர்பாக விளக்கம் அளித்துள்ள சவூதி தொழில்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹதப் அல் அனஸி கூறியதாவது:சவூதி குடிமக்களுக்கு வேலை வாய்ப்பை அளிப்பதை பொறுத்து நிறுவனங்கள் மூன்றாக பிரிக்கப்படும். அதிகமான உள்நாட்டினருக்கு வேலை வழங்கும் நிறுவனங்கள் க்ரீன் பிரிவில் உட்படும். குறைந்த அளவில் வெளிநாட்டினருக்கு வேலை வழங்கும் நிறுவனங்கள் யெல்லோ பிரிவில் உட்படும். வெளிநாட்டினருக்கு மட்டும் வேலை வழங்கும் நிறுவனங்கள் ரெட் பிரிவில் உட்படும்.

சவூதி மயமாக்கல் நடவடிக்கையை பூர்த்தியாக்காகத யெல்லோ பிரிவு நிறுவனங்கள் இவற்றை பூர்த்தியாக்கிய பிறகு இகாமா புதுப்பித்து வழங்கப்படும். அதே வேளையில் ரெட் பிரிவில் உள்பட்ட தொழிலாளர்களுக்கு இகாமா புதுப்பித்து வழங்கப்படாது. இவர்கள் நாட்டில் எவ்வளவு காலத்தை செலவிட்டாலும் அவையெல்லாம் கணக்கில் கொள்ளப்படாது. க்ரீன் பிரிவில் உள்படும் நிறுவனங்களுக்கு இகாமா புதுப்பிக்க நிபந்தனைகள் இல்லை. வீடுகளில் பணிபுரிவோர் புதிய சட்டத்தின் வரம்பிற்குள் வரமாட்டார்கள். இவர்கள் எவ்வளவு ஆண்டுகள் சவூதியில் வேலை பார்த்தாலும் இகாமா புதுப்பிப்பதில் தடையில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இச்சட்டம் நடைமுறைக்கு ஒவ்வாது என சில வர்த்தகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 80 லட்சம் வெளிநாட்டினர் சவூதியில் பணிபுரிகின்றனர். இவர்களில் 60 லட்சம் பேர் தனியார் நிறுவனங்களி பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் கோடி சவூதி ரியால் இவர்கள் தங்களது தாய் நாட்டிற்கு அனுப்புவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.


வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கட்டுப்பாடு:சவூதி தொழில் துறை அமைச்சகம் விளக்கம்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10928
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum