தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அமெரிக்காவின் தலைமையில் சர்வதேச இணையதள போர் துவங்கியுள்ளது-சீனா

2 posters

Go down

அமெரிக்காவின் தலைமையில் சர்வதேச இணையதள போர் துவங்கியுள்ளது-சீனா  Empty அமெரிக்காவின் தலைமையில் சர்வதேச இணையதள போர் துவங்கியுள்ளது-சீனா

Post by முஸ்லிம் Sat Jun 04, 2011 4:34 pm

பீஜிங்:அரபு நாடுகள் உள்ளிட்ட அரசுகளை கவிழ்க்க அமெரிக்கா சர்வதேச அளவிலான ’இணையதள போரை’ துவக்கியுள்ளதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவில் உயர் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், ராணுவ அதிகாரிகள் ஆகியோர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நபர்களின் ஜி-மெயில் அக்கவுண்டுகளை சீனாவில் ஜீனானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹேக்கர்கள் திருடியதாக நேற்று முன்தினம் கூக்ள் குற்றம் சாட்டியிருந்தது.

கூக்ள் அதிகாரிகள் நடத்திய சிறப்பு பரிசோதனையில் ஹேக்கிங் நெட்வர்க் கண்டுபிடிக்கப்பட்டது.ஆனால், இந்த குற்றச்சாட்டை அன்றைய தினமே சீனா மறுத்தது. இந்நிலையில் நேற்று அமெரிக்கா சர்வதேச அளவிலான இணையதள போரை நடத்துவதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.

அண்மை காலத்தில் நடந்த அனைத்து சைபர் தாக்குதல்களின் பின்னணியிலும் அமெரிக்கா செயல்பட்டுள்ளது. அனைத்து நாடுகளின் ராணுவத்தினரும் அமெரிக்காவின் இணயதள போரில் முடங்கிவிடக் கூடாது. ஆனால், இணையதள போரை எதிர்த்து போராடுவதற்காக தயாராக வேண்டும் என சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள சீனா யூத் டெய்லி தெரிவித்துள்ளது.

இதற்கிடையே பிரபல எலக்ட்ரானிக் நிறுவனமான சோனி கார்ப்பரேசன் இணையதளங்கள் மீது மீண்டும் சைபர் தாக்குதல் நடந்துள்ளது. சோனி பிக்சேர்ஸின் இணையதளத்தில் நுழைந்த ஹேக்கர்கள் இணையதளத்தின் சர்வரில் இருந்து ஏராளமான ரகசிய தகவல்களை திருடியதாக சோனியின் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. லூயிஸ் செக்யூரிட்டி என்ற ஹேக்கர்கள் தாம் இத்தாக்குதலுக்கு பின்னணியில் செயல்பட்டுள்ளதாக சோனி குற்றம் சாட்டியுள்ளது.


அமெரிக்காவின் தலைமையில் சர்வதேச இணையதள போர் துவங்கியுள்ளது-சீனா  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10938
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

அமெரிக்காவின் தலைமையில் சர்வதேச இணையதள போர் துவங்கியுள்ளது-சீனா  Empty Re: அமெரிக்காவின் தலைமையில் சர்வதேச இணையதள போர் துவங்கியுள்ளது-சீனா

Post by afsan Sat Jun 04, 2011 5:17 pm

அமெரிக்கா ஒவ்வொரு காலக் கட்டத்திலும் தன்னுடைய நாட்டிற்க்குள் நிலவும் நெருக்கடிகளைச் சமாளிக்க இது போல நரித் தந்திரம் செய்து வருவது அதன் வாடிக்கை.ஆனால் அதன் காசு ஆசை சுபிட்சமாக மக்கள் வாழ்ந்துவரும் சில நாடுகளிலும் குழப்பம் ஏற்படுத்த முயற்சிப்பது தான் மிகவும் பயங்கரமானது. அதன் தலையிலேயே மண்ணை வரிப் போட்டுக்கொள்ளுவதற்க்குச் சமமானது ....
afsan
afsan
New Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 7
ஸ்கோர் ஸ்கோர் : 4747
Points Points : 9

Back to top Go down

அமெரிக்காவின் தலைமையில் சர்வதேச இணையதள போர் துவங்கியுள்ளது-சீனா  Empty Re: அமெரிக்காவின் தலைமையில் சர்வதேச இணையதள போர் துவங்கியுள்ளது-சீனா

Post by முஸ்லிம் Sat Jun 04, 2011 5:28 pm

afsan wrote:அமெரிக்கா ஒவ்வொரு காலக் கட்டத்திலும் தன்னுடைய நாட்டிற்க்குள் நிலவும் நெருக்கடிகளைச் சமாளிக்க இது போல நரித் தந்திரம் செய்து வருவது அதன் வாடிக்கை.ஆனால் அதன் காசு ஆசை சுபிட்சமாக மக்கள் வாழ்ந்துவரும் சில நாடுகளிலும் குழப்பம் ஏற்படுத்த முயற்சிப்பது தான் மிகவும் பயங்கரமானது. அதன் தலையிலேயே மண்ணை வரிப் போட்டுக்கொள்ளுவதற்க்குச் சமமானது ....

மிகச் சரியாக சொன்னீர்கள் சகோ...
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10938
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

அமெரிக்காவின் தலைமையில் சர்வதேச இணையதள போர் துவங்கியுள்ளது-சீனா  Empty Re: அமெரிக்காவின் தலைமையில் சர்வதேச இணையதள போர் துவங்கியுள்ளது-சீனா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தீவிரவாதத்தின் மீதான போர் எண்ணை வள நாட்டை கைப்பற்றுவதற்கே – பிரிட்டன் போர் எதிர்ப்பு பிரச்சாரக் குழு
»  தலைமறைவான விக்கிலீக் இணையதள அதிபர்!
» இந்தியா,ஆப்கனுடன் பாகிஸ்தான் நல்லுறவைப் பேணவேண்டும் - சீனா!
» ஈரான் மீதான தடையை ஆதரிக்கமாட்டோம் – சீனா அறிவிப்பு
» மூன்றாம் உலக போரே வந்தாலும் சீனா ஈரானை பாதுகாக்கும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum