தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இல்யாஸ் காஷ்மீரி கொல்லப்படவில்லை - அமெரிக்கா

Go down

இல்யாஸ் காஷ்மீரி கொல்லப்படவில்லை - அமெரிக்கா  Empty இல்யாஸ் காஷ்மீரி கொல்லப்படவில்லை - அமெரிக்கா

Post by முஸ்லிம் Thu Jun 09, 2011 10:43 pm

இல்யாஸ் காஷ்மீரி கொல்லப்பட்டதாகத் தங்களுக்கு உறுதியாக எந்தத் தகவலும் வரவில்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 3 ஆம் திகதி தெற்கு வசீரிஸ்தானில் நடைபெற்ற தாக்குதலில் இல்யாஸ் காஷ்மீரி கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அறிவித்திருந்தது. இந்தத் தாக்குதலை அமெரிக்கா ஆளில்லா ஏவுகணை மூலம் நடத்தியது. இல்யாஸ் காஷ்மீரி ஹரகத்துல் ஜிஹாதல் இஸ்லாமி (HUJI) என்ற அமைப்பின் தலைவர் ஆவார்.

ஆனால், தற்போது காஷ்மீரி கொல்லப்பட்டதை அமெரிக்க அதிகாரிகள் மறுத்துள்ளனர். தங்களுக்கு இது சம்பந்தமாக எந்தத் தகவலும் இல்லை என அவர்கள் தெரிவித்தனர். அமெரிக்கவிலிருந்து செயல்படும் தனியார் ஆய்வு மையமான SITE என்ற நிறுவனமும் இல்யாஸ் காஷ்மீரி கொல்லப்பட்டதை மறுத்துள்ளது. இந்த நிறுவனம் தீவிரவாதிகளின் செய்திகள் மற்றும் அறிக்கைகளை ஆய்வு செய்து வரும் நிறுவனமாகும். இல்யாஸ் காஷ்மீரி கொல்லப்பட்டதைத் தெரிவிக்கும் ஒரு தொலைநகலுடன் வந்த புகைப்படம் இல்யாஸினுடையது அல்ல எனத் தெரிவித்துள்ளது. இது மும்பைத் தாக்குதலில் கொல்லப்பட்ட அபு தேரா இஸ்மாயில் கானுடையது எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

மேலும், இந்தச் செய்தியை உறுதிப்படுத்தி HUJI இயக்கம் அனுப்பிய செய்தியும் பொய்யானது எனத் தெரிகிறது. இதுவரை எந்தவிதமான ஊடக அறிக்கைகளையும் இந்த இயக்கம் அனுப்பியதில்லை. அனுப்பப்பட்ட செய்தியிலும் இந்த இயக்கத்தின் பெயர் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹரகத்துல் ஜிஹாதல் இஸ்லாமி என்ற பெயர் ஒரு இடத்தில் ஹரகத்தே ஜிஹாதல் இஸ்லாமி என்றும் மற்றொரு இடத்தில் ஹரகத்தே ஜிஹாதே இஸ்லாமி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க கமாண்டர் டேவிட் பெட்ரோசும் இல்யாஸ் கொல்லப்பட்டது சம்பந்தமாக தனக்கு எந்தவித ஆதாரபூர்வமான தகவலும் கிட்டவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இல்யாஸ் காஷ்மீரி ஏற்கெனவே 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டதாக தவறான தகவல் அப்போது வெளியானது. இல்யாஸ் காஷ்மீரி விஷயத்தில் பாகிஸ்தானும் அமெரிக்காவும் முரண்பட்டிருப்பதிலிருந்து ஒஸாமா பின் லேடன் அமெரிக்காவினால் கொல்லப்பட்ட பிறகு விரிசல் அடைந்த இரு நாடுகளுக்கிடையிலான உறவு இன்னும் சீராகவில்லை எனத் தெரிகிறது.

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10943
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum