தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மாபெரும் மணற் தடையை நிறுவும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை

Go down

மாபெரும் மணற் தடையை நிறுவும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை  Empty மாபெரும் மணற் தடையை நிறுவும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை

Post by முஸ்லிம் Fri Jun 10, 2011 3:50 pm

கடந்த வியாழக்கிழமை (09.06.2011) இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை காஸாவின் கான் யூனிஸ் கிழக்குப் பிராந்தியத்தில் அமைந்துள்ள குஸா நகர நுழைவாயிலருகே மாபெரும் மணற் தடையொன்றை ஏற்படுத்தியுள்ளது. இதன் போது ஆக்கிரமிப்பு இராணுவத்தின் புல்டோஸர்கள் பயன்படுத்தப்பட்டதோடு, மூன்று யுத்த தாங்கிகள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

மேற்படி மணற் தடையை நிர்மாணித்துக் கொண்டிருந்த தொழிலாளிகளை உள்ளூர்வாசிகள் அடையாளம் கண்டுகொள்ளக்கூடாது என்ற எண்ணத்தில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி அப்பகுதியையே ஒரு புகைமண்டலமாக்கியதாக ஸஃபா செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

எதிர்பாராதவிதமாக பலஸ்தீன் கிராமங்களுக்குள் நுழைந்து தாக்குதல் நடாத்தல், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளல், யுத்த தாங்கிகள் புடைசூழச் சென்று புல்டோஸர்களால் பலஸ்தீன் பொதுமக்களின் வீடுகள், பயிர்நிலங்களை இடித்து நிர்மூலமாக்குதல் முதலான நடவடிக்கைகள் மூலம் உள்ளூர் மக்களான பலஸ்தீனர்களை ஆத்திரமூட்டக்கூடிய வகையில் செயல்படுதலும், ஆக்கிரமிப்பு இராணுவத்தின் அடாவடித்தனம் பொறுக்கமுடியாமல் கொதித்தெழும் மக்களைக் குற்றவாளிகளாக்கிக் கைதுசெய்வதும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் வாடிக்கையாகும் என உள்ளூர் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10950
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஊடகவியலாளரைத் தாக்கிய இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை
»  இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் வெறியாட்டம் - பலஸ்தீன் இளம்பெண் வாக்குமூலம்
» 15 சிறுவர்கள் உட்பட 73 பலஸ்தீனர்கள் கைது!
»  மத்திய ஜெரூசலத்தில் மாபெரும் யூத வழிபாட்டுத்தலம்
» மோடியை கைது செய்யக் கோரி சென்னையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum