தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பாகிஸ்தான் குடிமகன் கிஷ்தியை விடுதலை செய்ய உச்ச நீதிமன்ற நீதிபதி கோரிக்கை

Go down

பாகிஸ்தான் குடிமகன் கிஷ்தியை விடுதலை செய்ய உச்ச நீதிமன்ற நீதிபதி கோரிக்கை  Empty பாகிஸ்தான் குடிமகன் கிஷ்தியை விடுதலை செய்ய உச்ச நீதிமன்ற நீதிபதி கோரிக்கை

Post by முஸ்லிம் Mon Jun 20, 2011 5:07 pm

புதுடெல்லி:அஜ்மீர் சிறையில் துயரத்தை அனுபவித்துவரும் பாகிஸ்தான் குடிமகனான 80 வயதான டாக்டர் கலீல் கிஷ்தியை மனித நேயத்தின் அடிப்படையில் விடுதலை செய்யவேண்டுமென உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசியல் சட்டம் 72-வது பிரிவின் படி கிஷ்தியை விடுவிக்கக்கோரி பாராளுமன்ற உறுப்பினர் ராஜூவ் சுக்லா வழியாக பிரதமருக்கு அனுப்பிய இ-மெயில் கடிதத்தில் மார்க்கண்டேய கட்ஜு இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். வயதான நோயாளியான கிஷ்தியை விடுவிக்க மனிதன் என்ற அடிப்படையிலும், நீதிபதி என்ற அடிப்படையிலும் தான் இந்த வேண்டுகோளை விடுப்பதாக கட்ஜு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்திய குடிமகன் கோபால் தாஸை விடுவிக்கக்கோரி அவரது சகோதரர் ஆனந்த அளித்த மனுவில், கட்ஜு பாக்.ஆட்சியாளர்களிடம் மனித நேய அடிப்படையில் கோபால் தாஸை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

பாக்.அதிகாரிகளுக்கு கட்டளை முடியாது என்றாலும், கோரிக்கை விடுக்கலாம் என்ற அடிப்படையில் கட்ஜு இதனை தெரிவித்திருந்தார். கட்ஜுவின் வேண்டுகோளை ஏற்று பாக்.அதிகாரிகள் கோபால் தாஸை விடுவிக்கவும் செய்தனர். இதனைத் தொடர்ந்து பாக்.உச்ச நீதிமன்றத்தில் கிஷ்தியை விடுதலை செய்ய கோர வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது.

பாகிஸ்தான் அரசு கிஷ்தியை விடுவிப்பதுக் குறித்து இந்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தெரிவித்ததை தொடர்ந்து தலைமை நீதிபதி இஃப்திகார் சவுதரி தலைமையிலான பெஞ்ச் இம்மனுவை தள்ளுபடி செய்தது.

நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, பிரதமருக்கு தான் எழுதிய கடிதத்தில், கிஷ்தி கராச்சி மருத்துவக்கல்லூரியில் வைராலஜி துறை பேராசிரியர் எனவும், எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்.டி பட்டம் பெற்றவர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

1992-ஆம் ஆண்டு அஜ்மீருக்கு தனது நோயாளியான தாயாரை பார்க்கவந்த கிஷ்தி அப்பொழுது ஏற்பட்ட குடும்பத்தகராறையொட்டி ஏற்பட்ட மோதலில் கைது செய்யப்பட்டார். அந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் கிஷ்தியையும் போலீஸார் குற்றவாளியாக சேர்த்துவிட்டனர். இக்கால இடைவேளையில் கிஷ்திக்கு கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டது. 18 ஆண்டுகளாக இவ்வழக்கு நடந்துவருகிறது.

கடந்த 2010 ஆம் ஆண்டு இவ்வழக்கில் கிஷ்திக்கு ஆயுள் தண்டனையை கீழ் நீதிமன்றம் வழங்கியது. இவ்வழக்கின் மேல்முறையீடு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இவ்வழக்கின் மேல்முறையீட்டில் எப்பொழுது விசாரணை நடக்கும் என்பது தெரியாது. நோயாளியான கிஷ்தி சிறையில் மரணிக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு நிகழ்ந்தால் அது நாட்டிற்கே அவமானம் என கட்ஜு பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


பாகிஸ்தான் குடிமகன் கிஷ்தியை விடுதலை செய்ய உச்ச நீதிமன்ற நீதிபதி கோரிக்கை  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10940
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» சஞ்சீவ் பட்டை உடனடியாக விடுதலை செய்ய மனித உரிமைக் குழுவின் தலைவர் கவர்னருக்கு கோரிக்கை
» உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி! குஜராத்தில் முன்கூட்டியே தேர்தல்
» டாக்டர் கலீல் ஜிஸ்தியை விடுதலை செய்ய வேண்டும்-மகேஷ் பட்
» புஷ்ஷை கைது செய்ய ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஆம்னஸ்டி கோரிக்கை
» ஈரான் எரிவாயு குழாய் திட்டம்: பாகிஸ்தான் வாபஸ் பெற அமெரிக்கா கோரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum