தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஃப்ரீடம் ஃப்ளோட்டில்லா மீண்டும் காஸ்ஸாவிற்கு:குழுவில் அமெரிக்கர்களும் இடம்பெற்றுள்ளனர்

Go down

ஃப்ரீடம் ஃப்ளோட்டில்லா மீண்டும் காஸ்ஸாவிற்கு:குழுவில் அமெரிக்கர்களும் இடம்பெற்றுள்ளனர்  Empty ஃப்ரீடம் ஃப்ளோட்டில்லா மீண்டும் காஸ்ஸாவிற்கு:குழுவில் அமெரிக்கர்களும் இடம்பெற்றுள்ளனர்

Post by முஸ்லிம் Sat Jun 25, 2011 4:41 pm

நியூயார்க்:இஸ்ரேலின் தடையால் துயரத்தில் மூழ்கியிருக்கும் காஸ்ஸா மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக 36 அமெரிக்க சமூக ஆர்வலர்கள் காஸ்ஸாவிற்கு புறப்பட உள்ளனர்.

இம்மாதம் புறப்பட திட்டமிட்டிருக்கும் ஃப்ளோட்டில்லா குழுவில் இணைவதன் எதிர்கால விளைவுகளை குறித்து தங்களுக்கு தெரியும் என குழு நிர்வாகிகள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.’நம்பிக்கையின் துணிச்சலான செயல்’(audacity of hope) என இவர்கள் புறப்படவிருக்கும் கப்பலுக்கு பெயரிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் ஒரு புத்தகத்திலிருந்து இந்த பெயர் தேர்வுச்செய்யப்பட்டுள்ளது.கனடா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், டென்மார்க், ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகளின் நூற்றுக்கு மேற்பட்ட தன்னார்வ தொண்டர்களுடன் ஒன்பது கப்பல்கள் காஸ்ஸாவை நோக்கி புறப்படும்.காலநிலை மற்றும் இதர சூழல்களை பரிசீலித்து தேதி நிச்சயிக்கப்படும்.

கடந்த ஆண்டு காஸ்ஸா மக்களுக்கு உதவுவதற்காக நிவாரணப்பொருட்களுடன் சென்ற துருக்கி கப்பல் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய அக்கிரமத்தாக்குதலில் ஒன்பது தன்னாரவ தொண்டர்கள் அநியாயமாக படுகொலைச்செய்யப்பட்டனர்.இதுபோன்ற தாக்குதலை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என அமெரிக்க சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


ஃப்ரீடம் ஃப்ளோட்டில்லா மீண்டும் காஸ்ஸாவிற்கு:குழுவில் அமெரிக்கர்களும் இடம்பெற்றுள்ளனர்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10942
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum