அமெரிக்காவ தொடர்ந்து பிரிட்டனும் ஆப்கானிலிருந்து படைகளை வாபஸ் பெறுகிறது
Page 1 of 1

லண்டன்:அமெரிக்காவை தொடர்ந்து பிரிட்டனும் ஆப்கானிலிருந்து படைகளை வாபஸ் பெறுவதற்கு தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டு இறுதியில் 800 ராணுவ வீரர்களை பிரிட்டன் வாபஸ் பெறவருப்பதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் பிரிட்டீஷ் படைகளின் இருப்பைக்குறித்து உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் நடந்ததாக பாதுகாப்புத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவிக்கிறார். 2015-ஆம் ஆண்டில் பிரிட்டன் ராணுவம் ஆப்கானில் இருக்காது. வல்லுநர்களின் கருத்தின்படி விரைவில் ஆப்கானிலிருந்து பிரிட்டீஷ் படையினரை வாபஸ் பெறும் தீர்மானம் சரியானதாகும். பிரதமர் டேவிட் காமரூன் ஏற்கனவே இதுக்குறித்து தெரிவித்துள்ளார் என சண்டே டைம்ஸ் கூறுகிறது.
அடுத்த 9 மாதங்களில் 400 படை வீரர்களை வாபஸ்பெறப்போவதாக மே மாதம் பிரிட்டன் அரசு தெரிவித்திருந்தது. தற்போது 9500 ராணுவத்தினர் ஆப்கானில் உள்ளனர். ஆப்கானில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருக்கும் இரண்டாவது மேற்கத்திய நாடு பிரிட்டன் ஆகும். அடுத்த கோடைக்காலத்தின் இறுதியில் ஆப்கானிலிருந்து 33 ஆயிரம் படைவீரர்களை வாபஸ் பெறப்போவதாக பாரக் ஒபாமா தெரிவித்திருந்தார். அதன் பிறகு 70 ஆயிரம் படைவீரர்கள் மட்டுமே ஆப்கானில் மிஞ்சுவர்.
இதற்கிடையே ஆப்கானில் தங்கள் ராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்கப்போவதாக ஜெர்மனி அறிவித்துள்ளது. இவ்வாண்டு இறுதியில் 500 ராணுவ வீரர்களை வாபஸ் பெறப்போவதாக ஜெர்மனி அறிவித்துள்ளது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum