தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இஸ்லாத்தின் பார்வையில் தூக்கம்

2 posters

Go down

இஸ்லாத்தின் பார்வையில் தூக்கம்  Empty இஸ்லாத்தின் பார்வையில் தூக்கம்

Post by abuajmal Tue Jul 19, 2011 11:25 pm

அன்பார்ந்த சகோதரர்களே தூக்கம் என்பது வாழ்வின் எந்த அளவுக்கு இன்றியமையாத தேவை என்பதை நாம் அறிவோம்

ஒரு முஸ்லிம் தூக்கத்தை அல்லாஹ் தன் அடியாருக்கு வழங்கிய அருட்கொடையாகவே கருத வேண்டும்

அவன்உங்களுக்காகஇரவையும்பகலையும்படைத்திருப்பதுஅவன்அருட்கொடைகளில்ஒன்றுதான். இரவைநீங்கள்அமைதிபெறவேண்டும்என்பதர்க்காகவும்பகலைஅவனுடையஅருட்கொடையைதேடவேண்டும்என்பதர்க்காகவும் (28:73)

எனவே இறைவன் நமக்கு அழிக்கக்கூடிய அருட்கொடைகள் ஒவ்வொன்றிர்க்கும் நாம் நன்றி செலுத்தக்கூடியவர்களாக இருக்க வேண்டும்

எனவே ஒரு முஸ்லிம் தான் தூங்கும் போது பின் வரும் ஒழுக்கங்களைப் பேணுவது இந்த அட்ருட்கொடைக்கு நன்றி செலுத்துவதாக அமையும்.
தூங்கும்முன்கடைப்பிடிக்கவேண்டியவைகள்:

1.படுக்கைக்கு செல்வத்ர்க்கு முன்பு தொழுகைக்கு உழு எடுப்பதைப் போன்று உழு எடுத்துக்கொள்ள வேண்டும் (புஹாரி)

2.நாம் அணிந்திருக்கக்கூடிய ஆடையின் ஓரத்தைக் கொண்டு படுக்கவிருக்கும் விரிப்பை மூன்று முறை தட்டி விட வேண்டும் (புஹாரி)

3.தூங்குவத்ர்க்கு முன் திருக்குர்ஆனின் 2வது அத்தியாயமான சூரத்துல் பகராவின் (ஆமன ரஸூலு) என தொடங்கும் 285,286 ஆகிய வசனங்களை ஓதிக் கொள்ள வேண்டும் (புஹாரி)

4.பின் திருக்குர் ஆனின் சூரத்துல் இஹ்லாஸ், சூரத்துல் ஃபலக், சூரத்துன் நாஸ் ஆகிய சூராக்களை ஓதி இரண்டு கைகளிலும் ஊதி உடல் முழுவதும் தடவிக் கொள்ள வேண்டும் (புஹாரி)

5.திருகுர்ஆனின் சூரத்துல் பகராவின் 255 வது வசனமான ஆயத்துல் குர்ஸியை ஓத வேண்டும் இவ்வாறு ஆயத்துல் குர்ஸியை ஓதக்கூடியவர்களுக்கு அல்லாஹ் ஸுப்ஹானஹுவதாலா அன்றைய இரவு முழுவதும் நமது பாதுக்காப்பிற்க்காக ஓர் மலக்கை நியமிக்கின்றான் (புஹாரி)

6.பின் 33 ஸுப்ஹானல்லாஹ், 33 அல்ஹம்துலில்லாஹ், 34 அல்லாஹுஅக்பர் என்று தஸ்பிஃஹ் செய்தல் (புஹாரி)

7.படுப்பதர்க்கு முன் அல்லாஹும்மபிஸ்மிக்கஅமூத்துஅஹ்யா என்று ஓதி விட்டு படுக்க வேண்டும் இதன் பொருள்யா அல்லாஹ் உன் பெயரைக்கொண்டு மறனிக்கின்றேன் உன் பெயரைக்கொண்டு உயிர்வாழ்கின்றேன் .(திர்மிதி)

8.நீங்கள் உறங்குவதர்க்கு முன் விளக்குகளை அனைத்து விடுங்கள்,கதவுகளை தாள்பாழிட்டுவிடுங்கள் உணவையும் பாணத்தையும் மூடி வையுங்கள் (புஹாரி)

9.இவை அனைத்தும் முடித்து படுத்தப் பிறகு இறுதியாக இந்த துஆவை ஓதிக்கொள்ள வேண்டும்

அல்லாஹும்மஅஸ்லம்துநஃப்ஸீஇலைக், ஃபவ்வள்த்துஅம்ரீஇலைக், வஜ்ஜஹ்த்துவஜ்ஹியஇலைக், லாமல்ஜஅ

வலாமன்ஜாமின்கஇல்லாஇலைக், ஆமன்த்துபிகிதாபிகல்லதிஅன்ஜல்த்த, பிநபிய்யிகல்லதீஅர்ஸல்த்த.

பொருள்: யா அல்லாஹ் நான் என் மனதை உன்பால் சரணடையுமாறு செய்துவிட்டேன் மேலும் என் காரியங்களை உன்னிடம் ஒப்படைத்துவிட்டேன் மேலும் எனது முகத்தை உன் பக்கம் திருப்பிவிட்டேன்

மேலும் எனது முதுகையும் உன் பக்கம் ஒதுக்கிவிட்டேன் உன்பால் ஆர்வம் கொண்டும் அச்சம் கொண்டும்..! உன்னை விட்டுத் தஞ்சம் புகும் இடமோ உன்னை விட்டு விரண்டோடும் இடமோ உன் அளவிலே தவிர வேறில்லை!

நீ இறக்கியருளிய வேதத்தின் மீதும் நீ அனுப்பிய நபியின் மீதும் நம்பிக்கை கொண்டேன். (இவ்வாறு ஓதிவிட்டு தூங்கி அதே நிலையில்) நாம் மரணம் அடைவோமேயானால் (இன்ஷாஅல்லாஹ்) தூய்மையானவர்களாகவே மரணிப்போம். (புஹாரி)

தூங்கி விழிக்கும் போழுது சொல்ல வேன்டியவை:

அல்ஹம்துலில்லாஹில்லதிஅஹ்யானாபஃதமாஅமாத்தனாஇலைஹின்நுஷுர்

பொருள்:-எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே ! அவனே நம்மை மரணம் எண்ணும் தூக்கத்தில் ஆழ்த்திய பின் உயிர் பெற்றெழச்செய்தான் மேலும் (நாளை மறுமையில்) மீண்டும் எழுப்பப்பட்டு அவனிடமே செல்ல வேண்டியுள்ளது)

தூக்கத்தில் கெட்ட கனவு கண்டால்:

கவலை தரும் கனவுகளைக் கண்டால் இடது புறம் மூன்று தடவை துப்பிவிட்டு கீழ்கண்ட துஆவை ஓதிக்கொள்ள வேண்டும்

அஊதுபில்லாஹிமினஷ்ஷைத்தானிர்ரஜீம் (விரட்டப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹுவிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

அல்லாஹ் கூருகின்றான்:

ஈமான்கொண்டவர்களேஅல்லாஹுவைஅதிகமதிகமாகதிக்ரு(தியானம்) செய்யுங்கள்இன்னும்காலையிலும்மாலையிலும்அவனைத்துதியுங்கள் (33: 41,42)

எனவேஎன்னைநினையுங்கள்! நானும்உங்களைநினைக்கின்றேன்எனக்குநன்றிசெலுத்துங்கள்! எனக்குநன்றிமறக்காதீர்கள்! (2: 152)

அல்லாஹுவைஅதிகமாகநினைவுக்கூரக்கூடியஆண்கள்-பெண்கள்யாரோஅவர்களுக்குமன்னிப்பபையும்மகத்தானகூலியையும்அல்லாஹ்தயார்செய்துவைத்துள்ளான் (32: 35)

எனவே அன்புச் சகோதரர்களே நம் வாழ்கையின் ஒவ்வொறு விஷயங்களையும் குர்-ஆன்,ஹதீஸின் அடிப்படையில் அமைத்துக்கொண்டு என்னேரமும் இறை நினைவோடு கூடிய ஓர் சீரான வாழ்கையை வாழ நம் அனைவருக்கும் எல்லாம் வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக….!

http://tndawa.blogspot.com/2011/04/blog-post_30.html
abuajmal
abuajmal
New Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 12
ஸ்கோர் ஸ்கோர் : 4712
Points Points : 13
வயது வயது : 43
எனது தற்போதய மனநிலை : Happy

http://www.tndawa.blogspot.com http://www.tndawa.blogspot.com

Back to top Go down

இஸ்லாத்தின் பார்வையில் தூக்கம்  Empty Re: இஸ்லாத்தின் பார்வையில் தூக்கம்

Post by முஸ்லிம் Wed Jul 20, 2011 1:49 pm

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் அபுதாஹிர் smile

மாஷா அல்லாஹ் அருமையான பதிவு
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10928
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

இஸ்லாத்தின் பார்வையில் தூக்கம்  Empty Re: இஸ்லாத்தின் பார்வையில் தூக்கம்

Post by abuajmal Wed Jul 20, 2011 8:23 pm

முஸ்லிம் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் அபுதாஹிர் இஸ்லாத்தின் பார்வையில் தூக்கம்  124907

மாஷா அல்லாஹ் அருமையான பதிவு
வ அலைக்கும் ஸலாம் ரஹ்மத்துல்லாஹ்
ஜஸாக்கல்லாஹ் ஹைர் சகோ.
abuajmal
abuajmal
New Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 12
ஸ்கோர் ஸ்கோர் : 4712
Points Points : 13
வயது வயது : 43
எனது தற்போதய மனநிலை : Happy

http://www.tndawa.blogspot.com http://www.tndawa.blogspot.com

Back to top Go down

இஸ்லாத்தின் பார்வையில் தூக்கம்  Empty Re: இஸ்லாத்தின் பார்வையில் தூக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum