தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கேள்வி - பதில்

Go down

கேள்வி - பதில்  Empty கேள்வி - பதில்

Post by katharbabl Fri Aug 13, 2010 9:36 pm

கேள்வி:அழகர்

கடவுள் சர்வசக்தி படைத்தவன் என அய்யா அவர்கள் சொன்னார்கள். ஆயினும் இந்நாட்டில் பிரச்னைகள் உருவாவதே கடவுளின் பெயரால்தான். வரலாற்று சிறப்பு மிக்க பாபரி மஸ்ஜிதை இடித்தது மாபெரும் குற்றம். இந்துமதக் கடவுளின் பெயரைச் சொல்லி இதைச் செய்தார்கள்.அதே போல் பாதிரியாரைக் கொன்றார்கள். கன்னியாஸ்திரிகளை கற்பழித்தார்கள். கடவுளினால் உலகம் பூராவும் பிரச்னைதான். மதப்பிரச்னை, கடவுள் பிரச்சினை அத்துடன் தீண்டாமை, ஜாதிக் கொடுமை, இது ஜயாயிரம் வருடங்களாக இருக்கிறது. இதையெல்லாம் கடவுள் பார்த்துக் கொண்டு எப்படி சகிப்புத் தன்மையோடு சும்மா இருக்கிறார். இதற்கெல்லாம் என்ன தீர்வு? நாம் கடவுளை தூக்கி எறிந்துவிட்டு புதிய சமுதாயத்தை அமைப்பை ஏற்படுத்தி கடவுள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கலாமா?
katharbabl
katharbabl
Moderator

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 52
ஸ்கோர் ஸ்கோர் : 5128
Points Points : 28
வயது வயது : 37
எனது தற்போதய மனநிலை : Cool

http://www.commentanything.webs.com/

Back to top Go down

கேள்வி - பதில்  Empty Re: கேள்வி - பதில்

Post by katharbabl Fri Aug 13, 2010 9:39 pm

பதில்:

சண்டைகள் கடவுளின் பெயரால்தான் நடைபெறுகிறது என சகோதரர் அழகர் கூறியது உண்மைதான். இருந்தும் கடவுளின் பெயரால் மட்டும் நடைபெறவில்லை உதாரணமாக, மொழியின் பெயரால் சண்டை நடக்கிறது. இதற்கு கடவுள் கொள்கை காரணமல்ல. கடவுள் கொள்கைஇல்லாத கம்யூனிஸ்ட்களுக்கு மத்தியிலும் இடதுசாரி கம்யூனிஸ்ட், வலதுசாரி கம்யூனிஸ்ட் என சண்டை நடக்கிறது. எனவே சண்டைக்குக் காரணம் மனிதனின் வக்கிர புத்தியே தவிர கடவுள் கொள்கை அல்ல. சண்டை, சச்சரவுகளுக்கு மனிதன் கடவுள் கொள்கையைக் காரணம் காட்டுகிறான். மொழியைக் காரணம் காட்டுகிறான். இவனிடம் குடிபுகுந்துள்ள வக்கிர புத்தியைக் கூறுவதில்லை.எனவே சண்டை போடுகின்றவன் இருக்கின்ற வரை எதை வைத்தாவது சண்டை போட்டுக் கொண்டே இருப்பான். இதை ஒழிக்க முடியாது.

சகோதரரின் கேள்வியின் முக்கிய பகுதி என்னவென்றால், இவ்வளவும் நடக்கும் போது கடவுள் ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறார்? என்பதுதான்.பள்ளிவாசலை இடிக்கிறார்கள், பாதிரியாரை எரிக்கிறார்கள். இப்படி எவ்வளவோ நடந்தும் பார்த்துக் கொண்டிருக்கும் அக் கடவுளை ஓரம் கட்டிவிட்டு, கடவுள் கொள்கை இல்லாத ஒரு சமூகத்தை நாம் உருவாக்கி நாம் எல்லாவற்றையும் இல்லாதொழித்து விடலாமே! என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.

இரு விஷயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும். ஒன்று கடவுள் கொள்கையற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்கியபின் எப்பிரச்சினையும் இல்லாத சமுதாயமாக வாழலாம் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் கிடையாது. பக்குவபட்டு சரியாக நடக்க வேண்டுமென்ற உணர்வும் எல்லா மக்களுக்கும் வந்துவிடாது. கண்டிப்பாக அது முடியாத காரியமும் கூட.

ஏனெனில் கடவுள் இல்லை என ஓரம் கட்டிய பின் மனிதன் எவருக்குமே பயப்படமாட்டான். அவனவன் தத்தமது அறிவைப் பயன்படுத்தி ஒருவனுக் கொருவன் துரோகம் செய்ய முற்படுவான். அபகரிப்பான். ஊழல் புரிவான். உயர் மட்டம் இலஞ்சம் வாங்கும்.பாதகங்கள் அனைத்தும் தலை விரித்தாடும்.

மற்றொன்று, அநியாயங்களை கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறாரே! எனக் கேட்டது நல்லதொரு கேள்வி. இந்த அண்டத்தைப் படைத்தது பற்றி கூறும் இறைவன் இதை ஒரு சோதனைக் கூடமாக படைத்திருப்பதாகக் கூறுகிறான். இந்த உலகு, அதன் இன்பங்கள் போன்றவற்றிற்கு ஒரு கொசுவின் இறக்கையளவுகூட இறைவனிடம் மதிப்பு இல்லையென இறைவன் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். எனவேதான் இறைவன் இவ்வுலகில் மனிதன் புரிகின்ற அநியாயங்களை, அட்இழியங்களைக் கவனித்து உடனடியாகத் தண்டிக்காது, அவனுக்கு அவகாசம் வழங்கி அக்காலப் பகுதிக்குள் அவன் திருந்தி வாழ்கிறானா? எனப் பார்க்கிறான். தண்டைனைக் குரிய இடம் மறு உலகுதான்.

இங்கு வந்த்திருக்கும் மக்களை கவனியுங்கள். இவர்களில் சிலர் இதற்கு முன் குற்றம் புரிந்தவர்களே! ஆனால் காலப்போக்கில்அவைகளைத் தவறெனப் புரிந்து கொண்டு திருந்தி வாழ ஆரம்பித்திருக்கின்றனர். எனவே இப்படி ஒரு அவகாசத்தை இவர்களுக்குத் கொடுக்காமல் தவறு செய்த உடனேயே, இவர்களை இறைவன் அந்த இடத்திலேயே தண்டனையாக அழித்திருந்தால் இவர்கள் இந் நிலைக்கு ஆளாகி இருப்பார்களா? எனவே குற்றத்திற்கு உடனே இறை தண்டனை என்பது பொருத்தமற்ற செயலாகவே நமது சிந்தனைக்கு படுகிறது.

மனிதன் இயல்பில் தவறு புரிபவன்தான். எனினும் அவன் தனது தவறை நினைத்து திருந்தி வாழ முற்பட வேண்டும் என்ற கருத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதற்கான சிறிய சான்றொன்றையும் சமர்ப்பிக்க விரும்புகிறேன்.

அதாவது, முஸ்லிம் சமூகத்தில் காணப்படுகின்ற கொடுமைகள், மூட நம்பிக்கைகள் போன்றவற்றை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வருகின்ற என்னை மேலப்பாலையத்தில் ஒரு கூட்டத்தில் ஒரு சகோதரர் கொலை செய்யும் நோக்கில் எனது கழுத்தில் வெட்டியபோது அக்கத்தி இறையருளால் கையில் பட்டு சிறு காயங்களோடு நான் தப்பினேன். அல்ஹம்துலில்லாஹ்.

என்னை தீர்த்துக் கட்டிவிட வேண்டுமென்று வெட்ட வந்தவர் இப்போது எனது பாதுகாப்புக்கு எனக்கு துணையாக வந்திருக்கிறார். அன்றே அவரைப் பிடித்து காலி செய்திருந்தால் நிலமை என்னவாயிருக்கும்? எனவே மன்னித்து அவகாசம் கொடுப்பவராக நாமே இருக்கும்போது மிக்க கருணையுள்ள இறைவன் எப்படி உடனே தண்டிப்பான்?

இங்கு இருக்கக்கூடிய யாரவது நான் எந்தத் தவறும் இதுவரை செய்யவில்லை என துணிந்து கூறுங்கள் பார்க்கலாம். முடியாது. நிச்சயமாக முடியாது. இறைவன் உடனே தண்டிக்க வேண்டுமென விரும்பினால் நம் அனைவரையும் என்றோஅழித்திருக்க வேண்டும். அவ்வாறு நடந்திருந்தால் இப்புவியில் என்றோ மனித இனம் அழிந்து இருக்கும். ஆகவே புரிகின்ற தவறுகளுக்கு மறுமை நாளில் தண்டனை உண்டு என்ற நினைப்பு மனிதனுக்கு வந்து விடுமானால், ஒழுக்கமுள்ள வாழ்க்கையாக அவனது வாழ்வு மாறிவிடும் என்பதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடு.



katharbabl
katharbabl
Moderator

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 52
ஸ்கோர் ஸ்கோர் : 5128
Points Points : 28
வயது வயது : 37
எனது தற்போதய மனநிலை : Cool

http://www.commentanything.webs.com/

Back to top Go down

கேள்வி - பதில்  Empty Re: கேள்வி - பதில்

Post by katharbabl Fri Aug 13, 2010 9:40 pm

கேள்வி: E.V.R.M. தியாகராஜன் - மதுரை.

சல்மான் ருஷ்டி கவிதயை நீங்கள் படித்ததுண்டா? அவருக்கு மரண தண்டனை கொடுத்தது ஏன்? பேச்சுக்கு பேச்சு,எழுத்துக்கு எழுத்து என்று இருக்கும்போது மரண தண்டனை கொடுத்தது எந்த விதத்தில் நியாயம்? சல்மான் ருஷ்டியின் கவிதைகளை படித்திருக்கிறீர்களா? அதற்கு ஏன் மரண தண்டனை வழங்க வேண்டும்? என்ற கேள்வியை சகோதரர் தியாகராஜன் அவர்கள் கேட்டார்கள்.
katharbabl
katharbabl
Moderator

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 52
ஸ்கோர் ஸ்கோர் : 5128
Points Points : 28
வயது வயது : 37
எனது தற்போதய மனநிலை : Cool

http://www.commentanything.webs.com/

Back to top Go down

கேள்வி - பதில்  Empty Re: கேள்வி - பதில்

Post by katharbabl Fri Aug 13, 2010 9:40 pm

மரண தண்டனை வழங்கியது யார்?ஏதோ ஒரு நாட்டில் ஒருவர் அதை அறிவித்து விட்டார் என்பதற்காக அது இஸ்லாமியத் தீர்ப்பாகி விடுமா? நான் எனது அறிமுக உரையில் குறிப்பிட்டது போல் அது அல்குர்ஆனில் சொல்லப்பட்டிருந்தால் அல்லது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியிருந்தால் அதற்குப் பெயர்தான் இஸ்லாம். அவ்விரண்டிலும் இல்லாதவற்றை ஒருவர் தன் விருப்பத்துக்குச் சொன்னால் அது இஸ்லாம் அல்ல. இவற்றில் நினைவில் வைத்துக் கொண்டு விஷயத்தை கவனியுங்கள்.

சல்மான் ருஷ்டி ஒரு எழுத்தாளன் என்று மேற்கத்திய வாதிகளால் இனம் காட்டப்பட்டு போற்றப்படுபவன். இன்னொரு பெண்ணைப் பற்றியும் அய்யா அவர்கள் கேட்க மறந்து விட்டார்கள். அதற்கும் சேர்த்தே பதில் சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு.ஏனெனில் அந்தப் பெண்ணை பற்றியும் இங்கு கேள்விகள் எழுப்பலாம். அவள்தான் பெண்ணினத்திற்கு விடுதலை வாங்கித்தந்தவள் என மேற்குலகால் அறிமுகப்படுத்தப்பட்ட தஸ்லீமா நஸ்ரீன்.

ஆங்கிலம் தெரியாததால் சல்மான் ருஷ்டியின் ஆங்கில நூலை நான் படித்ததில்லை. அதன் மொழிபெயர்ப்பை ஒருவர் எனக்கு அனுப்பி வைத்திருந்தார்.அதை வாசித்து இருக்கின்றேன்.அதில் அவர் என்ன குறிப்பிடுகிறார் என்றால்

கடவுளிடம் இருந்து வந்த வாக்கியங்கள் என நபிகள் நாயகம் சொன்னவைகள் அனைத்துமே சாத்தானிடமிருந்து வந்தவைகள் என குறிப்பிடுகின்றார். அல்குர்ஆனை இறை வேதம் எனக் கூறுகின்ற முஸ்லிம்கள் அவ்வேதத்தை தங்கள் உயிரினும் மேலாக மதிக்கின்ற வேளையில் இப்படிச் சொல்லி புண்படுத்துவது முறையா? அது இறை வேதம் தானா? என்பதற்கான ஆதாரங்களை அவர் கேட்டிருக்கலாம். அதை விடுத்து தரக்குறைவாக விமர்சிப்பது புத்திசாலித் தனமல்ல. பண்பட்ட ஒருவனின் செயலுமல்ல.

அதே போன்று அவன் ஒரு கதையும் எழுதுகின்றான். அதன் கதாபாத்திரங்களாக விபசாரிகளாக இடம் பெறச் செய்து அவர்களுக்கு நபிகள் நாயகத்தின் தாயார் பெயர், மனைவியரின் பெயர்கள், அவர்களைத் தூதர் என ஏற்றுக் கொண்ட பல நல்ல பெண்களின் பெயர்கள் போன்றவற்றைச் சூட்டி இன்பம் கான்கிறான் இக் குறைமதி எழுத்தாளன். இதன் மூலம் அந்த நல்லவர்களை விபச்சாரிகள் என்று எடுத்துச் சொல்ல எத்தனிக்கிறான்.

ஒரு சமூகத்தில் பல இயல்புடையவர்கள் இருப்பர். இவனுடைய இக் குறுகிய சிந்தனையை தெளிவுப்படுத்தும் சீரிய சிந்தனைவாதிகளும் சமுதாயத்தில் இருப்பார்கள். இவனால் இப்படிச் சொல்ல முடிந்ததா? என ஆதங்கப்படுபவர்களும் இருப்பார்கள். உதாரணமாக ஒரு தாய்க்கு பத்து பிள்ளைகள் இருந்து அத்தாயைப் பற்றி சொல்லக் கூடாதவற்றை எவனோ ஒருவன் சொல்லிவிட்டால், சொல்லிவிட்டு போ என்று ஒரு மகன் சொல்வான். இன்னொருவன் செருப்பால் அடித்து விரட்டுவான். இப்படிப் பலவகையான மனிதர்கள் உண்டல்லவா?

ஆன்மீக சம்பந்ததப்பட்ட விஷயத்தில் இவ்வளவு தரக்குறைவான விமர்சனத்தை செய்ய முன் வந்தவனை மக்கள் நிந்திக்காமல் இருப்பார்களா? எம்மைப் பொறுத்தவரை இதற்கு அறிவுப்பூர்வமான விளக்கம் கொடுத்து 'வேதம் ஓதும் சாத்தான்' என்ற தலைப்பில் இலவச வெளியீடொன்றை பத்து ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டுள்ளோம். இஸ்லாத்தை அவன் தவறாகப் புரிந்து கொண்ட விதம் பற்றி அதில் விளக்கியுள்ளோம்.

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தரக்குறைவாகப் பேசி எழுதிய ஒரே காரணத்திற்காக, அவனை மிகப்பெரும் எழுத்தாளன் என அங்கீகரித்து, உயர் விருதுகளும் வழங்கியிருக்கிறது சில மேலை நாட்டு முரட்டு ஜென்மங்கள். நல்ல கற்புகரசிகளை, உலகமே அங்கீகரித்த அந்த பத்தினிகளை விபச்சாரிகள் எனக் குற்றம் சுமத்திய இவனை பெண்ணுரிமைக் காவலர்கள் கூட ஆதரித்த பெரும் கொடுமை நடந்திருக்கிறது.

ஷியாக்கள் என்பவர்கள் உணர்ச்சி வசப்படுபவர்கள். எந்த விஷயத்தையும் அறிவுப் பூர்வமாக சிந்திப்பதற்கு பதிலாக உணர்ச்சிப் பூர்வமாகவே பார்ப்பார்கள். இப்படி உணர்ச்சி வசப்பட்ட ஈரானியர்கள்தான் இத்தகைய முடிவை அறிவித்து இருந்தார்கள். இப்படி இஸ்லாம் சொல்லவில்லை. ஒரு சபையில் ஒரு விஷயத்தை முன்வைக்கும்போது நாலு விதமான தாக்கங்களை அது ஏற்படுத்தும். அப்படியான ஒரு நிலையில்தான் அத் தீர்ப்பும் கொடுக்கப் பட்டிருக்கிறது.

தஸ்லீமா நஸ்ரீனின் விவகாரமும் இதை ஒத்ததுதான். எந்தப் பெண்ணுக்கும் விடுதலை தேடிக் கொடுக்கும் எந்தக் கருத்தையும் அவளது எழுத்தில் காண முடியவில்லை. 'பெண்ணுக்கு விடுதலை வேண்டும்' என தனது நாவலில் குறிப்பிடுகின்ற அவள் அது பற்றி விவரிக்கின்றபோது கர்ப்பப்பை சுதந்திரம் வேண்டும் எனக் கூறுகிறாள். அதாவது எந்த ஒரு பென்ணும் தான் விரும்புகின்ற ஒரு ஆணின் விந்துவை தனது கர்ப்பப் பையில் செலுத்திக் கொள்ளும் உரிமை வேண்டுமாம். இதை எழுதவும், பேசவும் நமக்கே கூச்சமாக இருக்கின்றபோது ஒரு பெண் துணிந்து இதை நூலாக வடித்திருப்பது வேடிக்கையான விஷயமாக இருக்கிறது. பச்சை வேசித்தனத்திற்கு பல்லாக்கு தூக்குகிறாள்

இப்படிப்பட்ட அசிங்கங்களைத் தான் அவ்விருவரும் எழுதினார்களே தவிர தத்துவங்களையோ, திட்டங்களையோ, சீர்த்திருத்தங்களையோ அல்ல. அதற்காக மரண தண்டனையை நியாயப்படுத்தவும் நாம் தயாரில்லை. அதற்கு இஸ்லாம் பொறுப்புமல்ல. அது அவ்வாறு கூறவுமில்லை.
katharbabl
katharbabl
Moderator

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 52
ஸ்கோர் ஸ்கோர் : 5128
Points Points : 28
வயது வயது : 37
எனது தற்போதய மனநிலை : Cool

http://www.commentanything.webs.com/

Back to top Go down

கேள்வி - பதில்  Empty Re: கேள்வி - பதில்

Post by katharbabl Fri Aug 13, 2010 9:42 pm

கேள்வி: வேல்முருகன் - மதுரை

கிறிஸ்வர்களானாலும், இஸ்லாமியர்களானாலும் அடிப்படையில் நாம் தமிழர்கள். சிறுபான்மை சமுதாயத்தவர் பொங்கல் கொண்டாடுவதில்லை. அதை ஒரு இந்து மதவிழா போன்று நினைத்துப் புறக்கனிப்பதைப் பார்க்க முடிகிறது. எந்த மதத்தவரும் சொந்தம் கொண்டாட முடியாத, குறிப்பாக கிறிஸ்த்தவர்களும், இஸ்லாமியர்களும் கொண்டாடி தமிழர் விழாவைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நம்மிடம் இருக்கிறது. எனெனில் அதற்குப் பல பெயர்கள் சூட்டி அதை ஒரு மதப்பண்டிகையாக ஆக்க கடுமையான முயற்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. குர்ஆனிலோ, இஸ்லாத்திலோ அது வலியுறுத்தப் படாவிட்டாலும் உங்கள் அமைப்பின் சார்பாக பொங்கள் திருவிழாவை அனைவரும் கொண்டாட நீங்கள் வலியுறுத்த வேண்டும்.

katharbabl
katharbabl
Moderator

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 52
ஸ்கோர் ஸ்கோர் : 5128
Points Points : 28
வயது வயது : 37
எனது தற்போதய மனநிலை : Cool

http://www.commentanything.webs.com/

Back to top Go down

கேள்வி - பதில்  Empty Re: கேள்வி - பதில்

Post by katharbabl Fri Aug 13, 2010 9:42 pm

பதில்:
சகோதரர் வேல்முருகன் அவர்கள் நல்ல அழகான விஷயங்களை கோரிக்கைகளாக முன் வைத்தார்கள். இது சம்பந்தமாக சில விஷயங்களை இங்கு நான் முன் வைக்க விரும்புகிறேன்.அவைகளை வைத்து தமிழுக்கோ தமிழர்களுக்கோ நான் எதிரி என நீங்கள் முடிவு கட்டிவிடக் கூடாது. வேஷ்டி அணிவது இந்துக்களின் கலாச்சாரம் எனவும் சாறம்(கைலி) அணிவது இஸ்லாமியர்களின் கலாச்சாரம் எனவும் நினைக்கிறார்கள். உடைகளில் பேதம் காட்டக்கூடாது என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு. உடையைப் பொறுத்த வரையில் அவரவர்களின் உடலமைப்புக்கு எது பொருத்தமாக இருக்கிறதோ அதை அணிவதில் தடை ஏதுமில்லை. முஸ்லிம்களுக்கென்று தனி ஆடை இஸ்லாத்தில் இல்லை.

பேண்ட்டும் (முழு நீளக் காற்சட்டை) போடலாம். வேஷ்டியும் கட்டலாம். லுங்கியும் அணியலாம். ஆனால் மறைக்க வேண்டிய பகுதிகள் மறைக்கப் பட வேண்டும். பட்டு ஆடையை ஆண்கள் அணியக்கூடாது. காவி நிறத்தை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இஸ்லாத்தில் இம் மூன்று விதிகளைத் தவிர வேறெதுவுமில்லை.

காற்று வீசும்போது வேஷ்டியின் மூலம் தனது அவயங்களை மறைத்துக் கொள்ள முடியாது எனக் கருதும் ஒருவர் லுங்கி அணியலாம். அதுவும் பாதுகாப்பானது அல்ல எனக் கருதுபவர் முழுநீள காற்சட்டை அணிந்து கொள்ளலாம். இங்கு கலாசரம் எனக் கூறிக்கொண்டு நமக்கிருக்கும் வசதி வாய்ப்புகளை சீரழிப்பது சிறப்பல்ல. மாட்டு வண்டியில் செல்வதுதான் நமது கலாசாரம் என எடுத்துக் கொண்டு பிடிவாதம் கொள்வது சரியல்ல. போக்குவரத்தில் வந்து விட்ட நவீனங்களை, முன்னேற்றங்களை பயன் படுத்திக் கொள்கிறோம். உடையிலும் அவ்வாறு பயன்படுத்திக் கொள்வதில் தவறு என்ன இருக்கிறது? அதுபோன்று ஒரு கலாச்சார விழா நமது நாட்டில் தொடர்ந்து நடை பெற்று வருகிறது என்ற காரணத்திற்காக அதைச் செய்யும்படி எவரையும் வற்புறுத்த முடியாது. பொங்கல் விழாவை பொறுத்தமட்டில், தானியம் விழைந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுவதற்காக அவ்விழா கொண்டாடப் படுகிறது எனக் கூறப்படுகிறது.

அறுவடை செய்பவர்கள் தங்கள் தானியம் தமது வீட்டிற்கு வந்தடையும் வேளை மகிழ்ச்சியில் மூழ்குவது இயல்பே! இவர்கள் கொண்டாடினால் அதற்கு அர்த்தம் உண்டு. ஆனால் இதற்கு சம்பந்தம் இல்லாதவர்களால் இது கொண்டாடப்படுகிறது.

தானியத்தைப் பற்றி எதுவுமறியாத, விவசாயத்தைப் பற்றி எந்தக் கவலையுமற்ற சென்னைவாசிகள் ஆந்திர விவசாயிகளின் அரிசியை வாங்கி உண்ணுகின்றனர். உண்ணும் இவர்களைக் கொண்டாடுமாறு கேட்டு இவர்கள் கொண்டாடினால் அது இயல்பான கொண்டாட்டமாக இருக்காது. அவர்களின் மனோ நிலை சந்தோசமானதாய் இருப்பதற்குப் பதிலாக பண்டிகை வந்துவிட்டதே! செலவாகி விடுமே என்ற கவலை நிறைந்ததாகவே காணப்படும். இது ஒன்று.

இரண்டவது, எந்த நேரத்திலும் மனிதன் பகுத்தறிவை இழந்து விடக்கூடாது என்பது இஸ்லாத்தின் மிக முக்கிய விதிகளில் ஒன்று. எந்த நிலையிலும் மனிதனை விட மேம்பட்டதாக எப்பொருளையும் நினைக்கக் கூடாது. ஆடு, மாடு போன்ற மிருகங்களை விட எல்லா வகையிலும் மனிதன் உயர்ந்தவன் என்பது இஸ்லாத்தின் கொள்கை. இந்த அடிப்படை விதிகளுடன் பொங்கல் விழாவை நோக்கும்போது அதிக முரண்பாடுகளை அங்கே காண முடியும்.

மாடுதான் எல்லாவற்றையும் தந்தது என நம்மிக் கொண்டு அதற்கு நன்றி செலுத்துகிறோம் என்ற பெயரில் மாட்டுப் பொங்கல் என்ற ஒரு வழிபாட்டைச் செய்கிறார்கள். அப்படி ஒரு கலாச்சாரத்தில் கேள்வி கேட்ட சகோதரர் வேல்முருகன் நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட உண்மை நிலை அதுதான். மாட்டைக் கூம்பிடுகிறார்கள். அதற்கு வழிபாடு செய்கிறார்கள்.

மனிதனுக்கு ஏற்ற வகையில் தானாக இயங்கும் சிந்தனை மாட்டுக்கு கிடையாது. அதை எதற்கு நாம் பயன்படுத்துகிறோமோ அதை அது செய்யும் உழுதல், குத்துதல், சண்டையிடுதல் போன்ற வேலைகளுக்கு பழக்கப்படுத்தி நாமே அதைப் பயன்படுத்துகிறோம். நாம் அதைப் பயன்படுத்தி விவசாயம் செய்திருக்க அதற்கு பூஜை வழிபாடு எதற்கு? இதைச் செய்ய முற்படுகின்ற போது கடவுள் வழிபாடு போன்ற ஒரு தோற்றம் உண்டாகி விடுகிறது.

தம் கரங்களால் செய்த ஒரு பொருளான பானைக்கும் பூஜை செய்கிறார்கள். அதற்கு சில கோலங்கள் இட்டதும் புனிதத் தன்மை வந்துவிட்டதாக மக்கள் நினக்கிறார்கள். மாட்டுக்கும் கோலம் போட்டு கடவுளாக ஆக்கியது போல் இதுவும் அமைந்து விடுகிறது. இப்போது இஸ்லாத்திற்கு நேர் எதிர் மாறான கொள்கை செயற்பாடுகள் வந்து நுழைந்து விட்டன.ஒரு காலத்தில் தானியங்கள் வீட்டுக்கு வந்து சேருகின்ற மகிழ்ச்சியை மட்டும் பிரதிபலிக்கின்ற விழாவாக இந்தப் பொங்கல் விழா இருந்திருக்கலாம். அந்த நிலமைக்கு அதை நீங்கள் கொண்டு வாருங்கள் ஆட்சேபனை இன்றி எல்லோரும் கொண்டாடுவோம்.

கும்பிடக்கூடிய. பலதெய்வ வணக்கங்களை உண்டாக்கக்கூடிய விதத்தில் அவ்விழாக்கள் செல்லும்போது அதிலிருந்து ஒதுங்கி விடுமாறு இஸ்லாம் எம்மைப் பணிக்கிறது. நாம் தவிர்த்துக் கொள்ள காரணம் இதுவே தவிர காழ்ப்புணர்ச்சியல்ல.
katharbabl
katharbabl
Moderator

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 52
ஸ்கோர் ஸ்கோர் : 5128
Points Points : 28
வயது வயது : 37
எனது தற்போதய மனநிலை : Cool

http://www.commentanything.webs.com/

Back to top Go down

கேள்வி - பதில்  Empty Re: கேள்வி - பதில்

Post by katharbabl Fri Aug 13, 2010 9:43 pm

கேள்வி: பொன் வேம்பொழியன்

நடைமுறை பழக்கத்திலேயே இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அடிப்படை வித்தியாசம் உள்ளன. நான் வேஷ்டி கட்டுகிறேன். நீங்கள் லுங்கி கட்டுகிறீர்கள். நாங்கள் சூரியனை வழிபடுகிறோம்! நீங்கள் சந்திரனை வழிபடுகிறீர்கள்! இப்படி நடைமுறையில் அனைத்திலும் எதிராகவே இருக்கின்றீர்கள். இதன் அடிப்படை நோக்கம் என்ன?

katharbabl
katharbabl
Moderator

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 52
ஸ்கோர் ஸ்கோர் : 5128
Points Points : 28
வயது வயது : 37
எனது தற்போதய மனநிலை : Cool

http://www.commentanything.webs.com/

Back to top Go down

கேள்வி - பதில்  Empty Re: கேள்வி - பதில்

Post by katharbabl Fri Aug 13, 2010 9:44 pm

பதில்:
முஸ்லிம்கள் எங்களுக்கு எல்லா வகையிலும் எதிராக நடக்கக் காரணம் என்ன? என்று சகோதரர் கேட்டுள்ளார். இதற்கு அவர் இரண்டு உதாரணங்களை கூறினார். அந்த உதாரணங்களுக்கு மட்டும் முதலில் விளக்கம் அளித்து விடுவோம்! நாங்கள் வேஷ்டி உடுத்தினால் நீங்கள் லுங்கி உடுத்துகின்றீர்கள்! இதற்கு என்ன காரணம்? என்று கேட்டார்! நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும்! ஆடையைப் பொறுத்தவரை இந்த ஆடையைத்தான் உடுத்த வேண்டும் இதை உடுத்தக் கூடாது என இஸ்லாம் கட்டளை இடவில்லை! ஒரு ஆண் கண்டிப்பாக அவனுடைய தொப்புளில் இருந்து முட்டுக்கால் வரை மறைத்து உடை அணிந்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான்! வேஷ்டியைக் கொண்டும் மறைக்கலாம்,லுங்கியைக் கொண்டும் மறைக்கலாம். ஒரு போர்வையைக் சுற்றிக் கொண்டு கூட மறைக்கலாம்! மறைக்க வேண்டும் என்பதுதான் கட்டளையே தவிர இந்த ஆடைகள் கொண்டு தான் மறைக்க வேண்டும் என்ற கட்டளை கிடையாது!

நபிகள் நாயகம் அவர்கள் கட்டியது லுங்கி அல்ல. வேஷ்டிதான். தைக்கப்படாத ஒரு துணி மாதிரிதான் கட்டியிருந்தார்கள்.வேஷ்டி இஸ்லாத்திற்கு எதிரான ஒரு ஆடை கிடையாது! அது நாம் வெளியில் செல்லும்போது காற்றில் பறக்கும். தொடைப்பகுதி தெரிய வாய்ப்பு இருக்கின்றது! தொடையையும் நாம் சேர்த்து மறைத்துக் கொள்ள வேண்டும்.நபிகள் நாயகம் (ஸல்) வேஷ்டி கட்டும்போது கூட ஒரு முடிப்பால் இணைத்துக் கொள்வார்கள்! தொடைப்பகுதி வெளியே தெரியாத அளவிற்கு அவர்கள் உடுத்தி உள்ளார்கள்.

இப்போது நாம் வெளியே செல்லும்போது தொடை வெளியே தெரிகிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த நேரத்தில் நம் ஆடை காற்றில் விலகிவிடும். ஒரு ஆணின் தொடையை ஒரு பெண் பார்த்தால் அது நன்றாக இருக்காது! ஆனால் இந்த லுங்கியில் அது ஏற்படாது! எனவே தான் அவர்களாகவே லுங்கியைத்
தேர்ந்தெடுத்து அணிந்து கொள்கிறார்கள்! 'லுங்கி' என்பது மூடப்பட்டது! வேஷ்டி' என்பது மூடப்படாதது. இங்கு வந்திருக்கும் முஸ்லிம்களிலேயே நிறைய பேர் 'லுங்கி' அணியாமல் 'வேஷ்டி' 'பேண்ட்' உடுத்தியிருக்கிறார்கள்! மற்றும் பல மாதிரியான உடைகளை அணிந்திருக்கிறார்கள்.

அடுத்ததாக நாங்கள் 'சூரியனை' வணங்குகிறோம். நீங்கள் 'சந்திரனை' வணங்குகிறீர்கள் என்று கூறினீர்கள். 'சூரியன் சந்திரனை எல்லாம் வணங்கக் கூடாது என்று இஸ்லாம் கூறுகின்றது! ஒரு கடவுளைத்தான் வழிபடவேண்டும்.கடவுளைத் தவிர சூரியனை வழிப்படக் கூடாது. 'சந்திரனை' வழிப்ப்படக் கூடாது, 'தண்ணீரை' வழிப்படக் கூடாது, 'மனிதனை' வழிப்படக் கூடாது, 'தலைவனை' வழிப்படக் கூடாது, 'தன் தாயை'வழிப்படக் கூடாது, 'கணவனை' வழிப்படக் கூடாது.

கடவுளைத் தவிர எதையும் வழிப்படக்கூடாது என்று இஸ்லாம் கூறுகின்றது! ஆனால் அவர் அதைக் கேட்கவில்லை. எல்லோரும் சூரியன் அடிப்படையில் நாட்களை கணக்குப் போட்டால் முஸ்லிம்கள் 'சந்திரனை'வைத்துக் கணக்கு போடுவார்கள்! அது வேண்டுமானால் இருக்கின்றது! சந்திரனைக் கொண்டு 'ரமலான்' மாதம் என்கிறோம். 'ரமலான்' மாதம் என்பது சூரியனை வைத்து கணக்கிடுவது இல்லை. பிறையைப் பார்த்துத்தான் அந்த மாதத்தை எண்ணுகின்றோம்! மாதத்தை கணக்கிடுவதற்கு தான் 'சந்திரனை' பயன் படுத்துகின்றோம்! அந்த வகையில் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால் இது நல்ல கேள்விதான்!

ஆனால் இதை நாங்கள் மாறு செய்யவேண்டும் என்று செய்யவில்லை.இதுதான் அறிவுப்பூர்வமானது என்பதற்காகச் செய்கின்றோம்! இப்போது ஜனவரி தேதி 1 என வைத்துக் கொள்வோம். ஜனவரி 10 ம் தேதி, ஜனவரி 20 ம் தேதி, ஜனவரி 30 ம் தேதி என நான்கு தேதிகளை எடுத்துக் கொள்வோம்! இந்த நான்கு தேதிகளிலும் காட்டக் கூடியதற்கு சூரியனில் ஏதாவது இருக்கின்றாதா?

இது 1 ம் தேதி சூரியன் என்றோ இது10 ம் தேதி சூரியன் என்றோ இது 20 ம் தேதி சூரியன் என்றோ காட்டுவதற்கு ஏதாவது இருக்கின்றதா? இப்படிச் சொல்வதற்கு இயற்கையில் ஏதும் இல்லை! எனவே நாள் காட்டுவதற்கான அமைப்பு சூரியனில் இல்லை. இரவையும் பகலையும் காட்டக்கூடிய தன்மைதான் சூரியனில் இருக்கின்றது. இதற்கு சூரியனை வைத்து நாங்கள் பகல் என்கின்றோம். இப்போது நீங்கள் எங்களை கேட்கின்றீர்கள். நாங்கள் பகல் என்கின்றோம். எதை வத்து நாங்கள் பகல் என்கிறோம்? நாங்கள் சூரியனை வைத்து கூறினோமா? அல்லது சந்திரனை வைத்து கூறினோமா? சூரியன் இருந்தால் பகல் சூரியன் இல்லையேல் இரவு. இப்போது நாங்கள் காலை, மாலை, முற்பகல், பிற்பகல் என்று சூரியனை வைத்துத் தான் கூறுகின்றோம்! சூரியன் இல்லாமல் நாங்கள் இரவு பகல் என்று கூற முடியாது! பகலிலே பார்த்தால் ஒரு சில நேரங்களில் சந்திரன் இருக்கும். ஆதலால் நேரத்தைக் கணக்கிடுவதற்கு பயன்படுவது சூரியன்.

நாட்களைக் கணக்கிடுவதற்கு பொருத்தமானது சந்திரன்.சந்திரனைப் பார்த்தால் நாளுக்கு நாள் மாறுபடும். அதை வைத்து நாட்களை கணக்கிடுலாம். ஆனால் அப்படி சூரியனில் என்ன இருக்கின்றது? ஒன்றும் இல்லை! ஆதலால் சந்திரன் எங்களுக்கு சூரியன் உங்களுக்கு என்று சூரியனையும் நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்! குர்ஆனிலும் அப்படி இருக்கின்றது! சந்திரனும் சூரியனும் காலம் காட்டிகள் என்று. ஆதலால் சூரியனும் சந்திரனும் காலம் காட்டுகின்றன.சூரியன் எதைக் காட்டுகின்றதோ அதையும் ஏற்றுக் கொள்வோம். நாட்களை காட்டுவதில் இரண்டும் ஒன்றுதான்!

தமிழில் கூட மூன்றாம் பிறை நான்காம் பிறை என்று கூறுவார்கள். மூன்றாம் பிறை என்று எண் போட்டு ஏன் கூப்பிடுகிறீர்கள்? பிறையை நீங்களும் தான் எண்ணுகிறீர்கள். அப்படித்தான் ஆதி காலத்திலும் இருந்துள்ளது! வெள்ளையர்களின் ஆதிக்கத்தால் தற்போது அதை விட்டுவிட்டு இதற்கு மாறிவிட்டீர்கள். பிறை தான் நாட்களைக் கணக்கிடுவதற்கு சரியானது!

முதல் நாள் பிறை கோடு போன்று இருக்கும். பதினான்காம் நாள் பிறை பெரியதாக இருக்கும். அதன் பிறகு போகப்போக சிறியதாக ஆகிவிடும். இதனால்தான் சந்திரன் நாட்களைக் கணக்கிட சரியானதாக உள்ளது. அதலால் சூரியனையும் சந்திரனையும் நாங்கள் வணங்குவது கிடையாது! காலம் காட்ட மட்டுமே இந்த இரண்டையும் பயன்படுத்துகின்றோம்!
katharbabl
katharbabl
Moderator

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 52
ஸ்கோர் ஸ்கோர் : 5128
Points Points : 28
வயது வயது : 37
எனது தற்போதய மனநிலை : Cool

http://www.commentanything.webs.com/

Back to top Go down

கேள்வி - பதில்  Empty Re: கேள்வி - பதில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum