தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஜெ.வை எதிர்த்து போஸ்டர் ஒட்டிய தவ்ஹீது ஜமாத்தினர் கைது!

Go down

ஜெ.வை எதிர்த்து போஸ்டர் ஒட்டிய தவ்ஹீது ஜமாத்தினர் கைது!  Empty ஜெ.வை எதிர்த்து போஸ்டர் ஒட்டிய தவ்ஹீது ஜமாத்தினர் கைது!

Post by முஸ்லிம் Tue Aug 02, 2011 7:45 pm

கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் இருவர் முதல்வர் ஜெயலலிதாவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதற்காக கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து நூற்றுக்கணக்கான தமிழக தவ்ஹீது ஜமாத்தினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.



நேற்று தொடங்கியுள்ள குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு வகுப்பு கலவர தடுப்பு மசோதாவை அறிமுகம் செய்ய முடிவெடுத்துள்ளது. இந்த மசோதா மாநில அரசின் உரிமையில் தலையிடுவதாக குற்றம் சாட்டி தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் ஜெயலலிதாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர். ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நகர செயலாளர் காஜாமூகைதீன், மாணவர் அணி செயலாளர் ரமீத்ஹசன் உள்ளிட்ட பலர் ஜெயலலிதாவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியபோது அந்தப் பகுதியில் ரோந்து வந்த புளியங்குடி டிஎஸ்பி சமீம் மற்றும் காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் பிடித்து காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.

நேற்று ரமலான் நோன்பு துவக்க நாள் என்பதால் முஸ்லீம்கள் நோன்பு வைத்திருந்தனர். இரண்டுபேர் காவல்நிலையம் கொண்டு செல்லப்பட்ட தகவல் அறிந்ததும் நகராட்சி பகுதி முஸ்லீம்கள் கடையநல்லூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். காவல்துறையினர் அவர்களை விட்டுவிடுவதாகக்கூறி அனைவரையும் சமாதானம் செய்து திருப்பி அனுப்பினர்.

எனினும், காவல்துறையினர் உறுதியளித்தபடி அவர்களை விடுவிக்காததால் மீண்டும் அவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். போராட்டம் தொடர்ந்து நீடிக்கிறது. காவல்துறையினர் அவர்களைக் கலைந்து செல்ல உத்தரவிட்டும் யாரும் கலைந்துபோகவில்லை. இதனால் அங்குப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10948
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» நெல்லையிலும் முதல்வரைக் கண்டித்து தவ்ஹித் ஜமாஅத் போஸ்டர்!
» குஜராத்: அத்வானியை எதிர்த்து போட்டியிட்ட திருநங்கை கொலை!
» சிறுபான்மையினர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து சிறப்பு கூட்டம்
» அயோத்தி - அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேலும் 2 மனுக்கள் தாக்கல்!
» துனீசியா:முகத்தை மறைக்க தடையை எதிர்த்து நடந்த போராட்டம் -போலீஸாருடன் எதிர்ப்பாளர்கள் மோதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum