தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இந்தியாவில் 180 மில்லியன் முஸ்லிம்கள்– யு.எஸ். கணிப்பு

Go down

 இந்தியாவில் 180 மில்லியன் முஸ்லிம்கள்– யு.எஸ். கணிப்பு Empty இந்தியாவில் 180 மில்லியன் முஸ்லிம்கள்– யு.எஸ். கணிப்பு

Post by முஸ்லிம் Tue Sep 06, 2011 4:15 pm

டெல்லி:இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 180 மில்லியனிற்கு மேலுள்ளதாக யு.எஸ். நம்புவதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

பத்து வருடத்திற்கு ஒரு முறை இந்திய அரசு மேற்கொள்ளும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுவதாகவும், இந்தியாவில் முஸ்லிம்களின் இருப்பு பல காரணிகளை அசைக்கும் தன்மை வாய்ந்ததாக உள்ளதாவும், விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அந்த கேபிள் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2001-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள அந்த கேபிளில், முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 138 மில்லியன் என்று குறைத்து காட்டப்பட்டுள்ளதாகும், யு.எஸ்.ஸின் கணக்குப்படி அது 180 மில்லியனை தாண்டும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் அசாதாரண நிலைமைகளை விவரிக்கும் அந்த கேபிள் தகவல், டெல்லியில் உள்ள யு.எஸ். தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இந்திய பொருளாதாரத்தை கட்டுபடுத்தும் அசிம் பிரேம்ஜி போன்ற ஒரு சில முஸ்லிம் பணக்கார முதலைகள் இந்தியாவில் இருந்தும், பெரும்பான்மையான முஸ்லிம் சமூகம் மிகவும் பின்தங்கியே வாழ்வதாக பறைசாற்றியுள்ளது.

ஷாருக்கான் போன்ற திரையுலக ஜாம்பவான்கள் இந்தியாவில் இருந்தும், கோடிக் கணக்கான முஸ்லிம்கள் வறுமையில் தத்தளித்து வருவதாக அக்கேபிள் தகவல் தெரிவிக்கிறது. மேலும், இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை மூன்று முஸ்லிம் ஜனாதிபதிகள் பதவி வகித்திருந்தாலும், பாராளுமன்றத்தில் அவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

2006-ம் வெளியிடப்பட்ட சச்சார் கமிட்டியின் அறிக்கையையும் அந்த கேபிள் உள்ளடக்கியுள்ளது. இந்திய தலித்களின் நிலைமையை விட முஸ்லிம்கள் ஒரு மோசமான போக்கில் வாழ்ந்து கொண்டிருப்பதாக அது கூறுகிறது.

மத துவேசம், எல்லைப் பிரச்சனை, வெளிநாட்டு அழுத்தம் போன்ற பிரச்சனைகளால் முஸ்லிம்கள் துண்டாடப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஷியா,சன்னி,பறேல்வி மற்றும் வஹாபிசம் போன்ற உட்பூசல்களையும் அக்கேபிள் விட்டுவைக்கவில்லை.


 இந்தியாவில் 180 மில்லியன் முஸ்லிம்கள்– யு.எஸ். கணிப்பு Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10929
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» 16 வருடங்களில் இந்தியாவில் இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை
» ஷார்ஜா:கொலை குற்றத்திற்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட 17 இந்தியர்களை விடுவிக்க 3.4 மில்லியன் திர்ஹம் நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
» இந்தியாவில் 49.84 லட்சம் குழந்தை தொழிலாளர்கள்
» இந்தியாவில் அதிகம் விவாதிக்கப்படுவது ஊழல்: பி.பி.சி சர்வேயில் தகவல்
» இந்தியாவில் போலியோ இல்லாத ஆண்டு 2011: ஐ.நா!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum