தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குர்ஆனிய பாடம்: வாதம் செய்யும் முறை

Go down

குர்ஆனிய பாடம்: வாதம் செய்யும் முறை  Empty குர்ஆனிய பாடம்: வாதம் செய்யும் முறை

Post by முஸ்லிம் Tue Sep 13, 2011 8:12 pm

வாக்குவாதம் செய்வதில் நாம் அளவிட முடியாத
சுகத்தை அனுபவித்து வருகிறோம். மணிக்கணக்கில் வாக்குவாதங்களை செய்ய
ஆரம்பித்த நாம் தற்போது நாள் கணக்கிலும் வாதங்கள் செய்து வருகிறோம். ரமலான்
மாதம் வந்து விட்டால் இந்த வாதத்தை மாதக் கணக்கில் செய்வதற்கும் நாம்
தவறுவதில்லை. இதில் வேதனை என்னவென்றால், வாதம் செய்யும் நாமனைவரும் குர்ஆனை
நமது துணைக்கு அழைத்துக் கொள்வதுதான்.

மாதக்கணக்கில் நாம் வாதங்களை செய்தாலும்
எந்தவொரு முடிவையும் நம்மால் எட்ட முடியவில்லை. தவறான கருத்தில் உள்ளவர்களை
நேர்வழிக்கு கொண்டு வரவோ அல்லது குறைந்த பட்சம் அவர்களின் கருத்தை தவறு
என்று நிலைநாட்டவோ நமக்கு முடியவில்லை.

குர்ஆனை வைத்து வாதம் செய்யும் நாம், அந்த
குர்ஆன் வாதம் செய்வதற்கு கற்றுக் கொடுத்த விதத்தை மறந்தது தான் பிரச்சனை.
அல்லாஹ்வின் நண்பர் இப்ராஹிம்(அலை) மற்றும் கொடுங்கோல் ஆட்சியாளன் நம்ரோத்
ஆகிய இருவருக்கும் இடையே நடைபெற்ற வாக்குவாதத்தை ஒரே வசனத்தில் (2:258)
குர்ஆன் அழகாக எடுத்துக் காட்டுகிறது.

ஆட்சியும் அதிகாரமும் தனக்கு
கொடுக்கப்பட்டதால் ஆணவம் கொண்டான் நம்ரூத். இந்த ஆணவம் அவனை நிலை தடுமாறச்
செய்தது. விளைவு…தன்னையே கடவுள் என்றான். இஸ்லாத்தை பிரச்சாரம் செய்து
கொண்டிருந்த இப்ராஹிம்(அலை) அவர்களுடன் படைத்தவனை குறித்த தர்க்கத்தில்
ஈடுபட்டான். அவனுக்கு பதிலலளித்த இப்ராஹிம்(அலை) அவர்கள், ‘எவன் உயிர்
கொடுக்கவும் மரணம் அடையவும் செய்கிறானோ அவனே என்னுடைய இரட்சகன்’
என்றார்கள். ‘நானும் உயிர் கொடுக்கிறேன், மரணம் அடைய செய்கிறேன்’ என்றான்
நம்ரூத்.

அறிஞர்கள் சிலரின் கருத்துப்படி அவன்
அறிவில்லாத ஒரு வாதம் மூலம் தன்னுடைய கருத்தை நிலைநாட்டினான். குற்றம்
சாட்டப்பட்ட இரண்டு கைதிகளை தன்னிடம் வரவழைத்தான். அதில் ஒருவரை விடுதலை
செய்தான், மற்றவரை கொல்லுமாறு ஏவினான். இதனை செய்துவிட்டு தான்
பெருமையுடன், ‘பார்த்தீர்களா நானும் உயிர் கொடுக்கிறேன், மரணத்தை
அளிக்கிறேன்’ என்றான்.

லாஜிக்காக தன்னுடைய வாதத்தை நிலைநாட்ட
முயற்சித்தான். உடனே இப்ராஹிம்(அலை) அவர்கள் அவனுடைய பதிலில் இருந்தே
அடுத்த கேள்வியை எழுப்பவில்லை. அவனுடைய முட்டாள்தனமாக வாதத்திற்கு பதில்
வாதம் அளிக்கவும் முயற்சிக்கவில்லை.

அவனுடைய வாதம் எப்படியெல்லாம்
ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு வாதம் என்று பட்டியல் இடவும் இல்லை. இதற்காக பல
மணிநேரங்களை ஒதுக்கவும் இல்லை.

மிகவும் சாதாரணமாக தனது அடுத்த கேள்வியை
கேட்டார்கள். ‘திட்டமாக அல்லாஹ் சூரியனை கிழக்கில் உதிக்க செய்கிறான். நீ
மேற்கு திசையில் உதிக்கும்படி செய்’ என்றார்கள். இதைக் கேட்ட மாத்திரத்தில்
நம்ரூத் திடுக்கத்தில் ஆழ்த்தப்பட்டான், வாயடைத்துப் போனான். ஒரே
வாக்கியத்தில் நம்ரூத்தின் தோல்வி அந்த சபையில் உறுதி செய்யப்பட்டது.
இப்ராஹிம் (அலை) அவர்கள் கொண்டு வந்த செய்தி அந்த சபையோருக்கும் தெளிவாக
சொல்லப்பட்டது. இப்ராஹிம் (அலை) அவர்கள் வாதத்திலும் வெற்றி பெற்றார்கள்.
தன்னுடைய கொள்கையையும் எத்தி வைப்பதில் வெற்றி பெற்றார்கள்.

இதுதான் குர்ஆன் நமக்கு நமக்கு கற்றுத்
தரும் வாக்குவாதம் செய்யும் முறை. நாம், குறிப்பாக அழைப்பு பணியிலும்
சமுதாய பணியிலும் உள்ளவர்கள், இதனை தவறாமல் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எதிரணியை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக மணிக்கணக்கில் எதிர்வாதத்தை
வைப்பதால் எவ்வித பிரயோஜனமும் இல்லை. நம்முடைய பதில் தெளிவாகவும்
சுருக்கமாகவும் அதே சமயம் எதிரணியை வாயடைக்கவும் வைக்க வேண்டும். இதன்
மூலம் நாம் உண்மையை நிலைநாட்டலாம், அசத்தியத்தை அழிக்கலாம், நம்முடைய
நேரத்தையும் சேமிக்கலாம்.

- ஏர்வை ரியாஸ்
குர்ஆனிய பாடம்: வாதம் செய்யும் முறை  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10927
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum