தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மிகச்சிறந்த 200 பல்கலைக்கழகங்களில் இந்தியாவுக்கு இடமில்லை

Go down

மிகச்சிறந்த 200 பல்கலைக்கழகங்களில் இந்தியாவுக்கு இடமில்லை  Empty மிகச்சிறந்த 200 பல்கலைக்கழகங்களில் இந்தியாவுக்கு இடமில்லை

Post by முஸ்லிம் Sun Oct 09, 2011 7:29 pm

லண்டன்:உலகின் மிகச்சிறந்த 200
பல்கலைக்கழகங்களில் இந்தியாவுக்கு இடம் கிடைக்கவில்லை. ஐ.ஐ.டிக்கள்,
ஐ.ஐ.எம்கள் உள்ளிட்ட இதர கல்வி நிறுவனங்களின் பட்டியலிலும் இந்தியாவுக்கு
இடம் கிடைக்கவில்லை.

பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ’டைம்ஸ் ஹையர் எஜுகேஷன்’ என்ற மாத இதழ் இப்பட்டியலை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவைச் சார்ந்த பல்கலைக்கழகங்கள்
இப்பட்டியலில் முன்னணி வகிக்கின்றன. 200-ல் 75 பல்கலைக்கழகங்களும்
அமெரிக்காவைச் சார்ந்தவையாகும். முதல் பத்து இடங்களை அமெரிக்காவின் 7
பல்கலைக்கழகங்களும், பிரிட்டனைச் சார்ந்த 3 பல்கலைக்கழகங்களும்
கைப்பற்றியுள்ளன. ஜெர்மனி 12, ஹாலந்து 12, கனடா 9, ஆஸ்திரேலியா 8
பல்கலைகழகங்கள் 200 பல்கலைகழகங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ஆசியாவைச்சார்ந்த டோக்கியோ
பல்கலைக்கழகம்(ஜப்பான்) 30-வது இடத்தையும், பெகிங் பல்கலைக்கழகம்(சீனா)
49-வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்தியாவிலிருந்து மும்பை இந்தியன்
இன்ஸ்ட்யூட் ஆஃப் டெக்னாலஜி(ஐ.ஐ.டி) 317-வது இடத்தை பிடித்துள்ளது.

முன்னணியில் உள்ள மிகச்சிறந்த
பல்கலைக்கழகங்களில் எல்லாம் ஏராளமான இந்திய மாணவர்கள் பயில்கின்றனர்.
பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களை இந்திய மாணவர்கள்
பெரிதும் விரும்புகின்றனர்.

அமெரிக்காவில் கலிஃபோர்னியா இன்ஸ்ட்யூட்
ஆஃப் டெக்னாலஜி முதல் இடத்தையும், ஹாவர்டு பல்கலைக்கழகம் இரண்டாவது
இடத்தையும் பிடித்துள்ளன. ஸ்டான்ஃபோர்ட்(அமெரிக்கா),
ஆக்ஸ்ஃபோர்ட்(பிரிட்டன்), ப்ரின்ஸ்டன்(அமெரிக்கா),
கேம்ப்ரிட்ஜ்(பிரிட்டன்), மாஸேசூட் இன்ஸ்ட்யூட் ஆஃப் டெக்னாலஜி(அமெரிக்கா),
இம்பீரியல் காலேஜ் லண்டன்(பிரிட்டன்), ஷிகாகோ(அமெரிக்கா),
கலிஃபோர்னியா-பெர்க்லி(அமெரிக்கா), யேல்(அமெரிக்கா),கொலம்பியா(அமெரிக்கா),
கலிஃபோர்னியா-லாஸ் ஏஞ்சல்ஸ்(அமெரிக்கா), ஜான் ஹாப்கின்ஸ்(அமெரிக்கா),
இ.டி.இஸ்ஸட் சூரிக்(ஸ்விட்சர்லாந்து), பென்சில்வானியா(அமெரிக்கா),
யூனிவர்சிடி காலேஜ் லண்டன்(பிரிட்டன்), மிஸ்ஸிகன்(அமெரிக்கா), யூனிவர்சிடி
ஆஃப் டொராண்டா(கனடா), கோர்னெல்(அமெரிக்கா) ஆகியன வரிசைக்கிரமமாக 3 முதல் 20
இடங்களை பிடித்துள்ள இதர பல்கலைக்கழகங்களாகும்.


மிகச்சிறந்த 200 பல்கலைக்கழகங்களில் இந்தியாவுக்கு இடமில்லை  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10948
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» தீவிரவாதிகளுக்கு இங்கு இடமில்லை-தப்லீக் ஜமாத் விக்கிலீக்சை தாக்கு
» இந்தியாவுக்கு புகழ் சேர்க்கும் முஸ்லிம்களின் கட்டிட கலை!
» இந்தியாவுக்கு நிதியுதவி: பிரிட்டனில் எதிர்ப்பு வலுக்கிறது
»  விக்கிலீஸ் மிரட்டல்: அமெரிக்கா, இந்தியாவுக்கு எச்சரிக்கை!
» சமூக இணையதளங்களுக்கு கட்டுப்பாடு: இந்தியாவுக்கு ஐ.நா பொதுச்செயலாளர் எதிர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum