தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

காஸ்ஸாவில் இஸ்ரேலின் தாக்குதலில் 5 பேர் மரணம்

Go down

காஸ்ஸாவில் இஸ்ரேலின் தாக்குதலில் 5 பேர் மரணம்  Empty காஸ்ஸாவில் இஸ்ரேலின் தாக்குதலில் 5 பேர் மரணம்

Post by முஸ்லிம் Mon Oct 31, 2011 5:02 pm

காஸ்ஸா:தெற்கு காஸ்ஸாவில் இஸ்ரேல் ராணுவம்
நடத்திய விமானத்தாக்குதலில் ஐந்து ஃபலஸ்தீனர்கள்
படுகொலைச்செய்யப்பட்டுள்ளனர். எகிப்தின் எல்லையையொட்டிய பகுதியில்
ஏவுகணைகள் தாக்கின.போராளி இயக்கமான இஸ்லாமிக் ஜிஹாதின் தலைவர் அஹ்மத் ஷேக்
கலீலும் அவருடைய சக உறுப்பினரும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
இவர்களின் ராக்கெட் தயாரிப்பு மையத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல்
கூறுகிறது.இரண்டு பேருக்கு கடுமையான காயமேற்பட்டுள்ளது.

தங்களின் தலைவர்களை கொலைச்செய்யும்பொழுது
இஸ்ரேலுடனான சமாதான பேச்சுவார்த்தைக்கு சாத்தியமில்லை என இஸ்லாமி ஜிஹாதின்
தலைவர் அபூ அஹ்மத் தெரிவித்துள்ளார். ஃபலஸ்தீனர்களை கொன்றொழிப்பதற்கு
இஸ்ரேல் முயல்வதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது.
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10930
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

காஸ்ஸாவில் இஸ்ரேலின் தாக்குதலில் 5 பேர் மரணம்  Empty இஸ்ரேல் தாக்குதலில் மேலும் 5 ஃபலஸ்தீனர்கள் படுகொலை

Post by முஸ்லிம் Mon Oct 31, 2011 5:04 pm

காஸ்ஸா:காஸ்ஸாவில் நேற்று முன்தினம்
துவங்கிய இஸ்ரேலின் அடாவடித்தாக்குதல் நேற்றும் தொடர்ந்தது. இஸ்ரேலின்
விமானத்தாக்குதல்களில் இரண்டு நாட்களில் 10 ஃபலஸ்தீன மக்கள்
கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதிலடியாக
இஸ்லாமிக் ஜிஹாத் இயக்கம் நடத்திய தாக்குதலில் ஒரு இஸ்ரேல் நாட்டவர்
கொல்லப்பட்டார். ஒரு இடைவேளைக்கு பிறகு மீண்டும் ஃபலஸ்தீன் – இஸ்ரேல் மோதல்
வலுத்ததையடுத்து எகிப்து சமாதான பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது.
இதனடிப்படையில் இரு பிரிவினரும் போர் நிறுத்தம் செய்துள்ளனர்.

மூத்த எகிப்து அரசின் புலனாய்வுத்துறை
தலைவர்கள் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிஹாத் அமைப்பினருடனும், இஸ்ரேலுடனும் நடத்திய
பேச்சுவார்த்தையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. காஸ்ஸாவில் நேற்று
அதிகாலை பலத்த குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாக உள்ளூர் மக்களை
மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்கு காஸ்ஸாவில் நேற்று இஸ்ரேல் நடத்திய
கொடூரத்தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். இதில் இரண்டு பேர் இஸ்லாமிக்
ஜிஹாதின் ஆயுதப்படையான அல்குத்ஸ் பிரிகேடைச் சார்ந்தவர்களாவர். இதற்கு
பதிலடியாக இஸ்லாமிக் ஜிஹாத் இஸ்ரேலை நோக்கி 21 ராக்கெட்டுகளை ஏவியது.

இதில் ஒரு இஸ்ரேலி காயமடைந்து பின்னர்
மருத்துவமனையில் வைத்து இறந்துபோனார்.நான்குபேருக்கு
காயமேற்பட்டுள்ளது.இத்தாக்குதலுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக அல்குத்ஸ்
ப்ரிகேட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. கடந்த சனிக்கிழமை தெற்கு
காஸ்ஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அல்குத்ஸ் ப்ரிகேடைச்சார்ந்தவர்கள்
உள்பட ஐந்துபேர் கொல்லப்பட்டனர்.

தங்களின் உறுப்பினர்கள் மீது தாக்குதல்
நடத்தி படுகொலைச்செய்த இஸ்ரேலின் அட்டூழியத்திற்கு எதிராக ஹமாஸும், இஸ்லாமி
ஜிஹாதும் கடுமையான கண்டனங்களை தெரிவித்தபோது நேற்று நடந்த
பேச்சுவார்த்தையில் சண்டையை நிறுத்த இரு அமைப்புகளும் ஒப்புக்கொண்டன.

சண்டை நிறுத்தம் ஏற்பட்ட பிறகும் மோதல்
நிகழ்வதாக செய்திகள் கூறுகின்றன.காஸ்ஸாவிலிருந்து ஏராளமான தடவை
குண்டுவெடிப்புகளின் சத்தம் கேட்டதாகவும், இஸ்ரேலை நோக்கி ஃபலஸ்தீன்
போராளிகள் தாக்குதலை நடத்தியதாகவும் அல்ஜஸீரா கூறுகிறது.


காஸ்ஸாவில் இஸ்ரேலின் தாக்குதலில் 5 பேர் மரணம்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10930
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum