சி.ஐ.ஏ உளவாளியை விடுவிக்க ஈரானுக்கு அமெரிக்கா கோரிக்கை

View previous topic View next topic Go down

சி.ஐ.ஏ உளவாளியை விடுவிக்க ஈரானுக்கு அமெரிக்கா கோரிக்கை

Post by முஸ்லிம் on Thu Dec 22, 2011 7:54 pm

வாஷிங்டன்:ஈரானில் கைதான அமெரிக்க உளவு
அமைப்பான சி.ஐ.ஏவின் ஏஜண்டை விடுதலைச் செய்யவேண்டும் என அமெரிக்க
வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நூலாண்ட் கோரிக்கை
விடுத்துள்ளார்.

டிசம்பர் 17-ஆம் தேதி டெஹ்ரானில் அமீர்
மிர்ஸாஇ ஹிக்மதி என்ற அமெரிக்க உளவாளியை அதிகாரிகள் கைது செய்தனர். தான்
சி.ஐ.ஏ உளவாளி என்பதை ஹிக்மதி ஒப்புக்கொண்டார். ஹிக்மதியின் குற்ற ஒப்புதல்
தொடர்பான வீடியோ காட்சிகளை நேற்று முன் தினம் ஈரானின் அதிகாரப்பூர்வ
தொலைக்காட்சி வெளியிட்டது.

ஹிக்மதியை சுவிட்சர்லாந்து தூதரகம் மூலமாக
ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. 2001-ஆம் ஆண்டு
அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்த ஹிக்மதி அமெரிக்காவிலும், ஆப்கானிஸ்தானில்
அமெரிக்காவின் தளமான பக்ராமிலும் பயிற்சி பெற்ற பிறகு டெஹ்ரானுக்கு
வந்துள்ளார். அமெரிக்க ராணுவத்தில் ஹிக்மதி அரபு மொழிப் பெயர்ப்பாளராக
பணியாற்றியுள்ளார். இவருடைய குடும்பத்திற்கு அனைத்து உதவிகளும்
வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. தென்மேற்கு அமெரிக்காவின்
அரிஸோனாவில் பிறந்தவர் ஹிக்மதி.




"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
மதிப்பெண் மதிப்பெண் : 8606
மதிப்பீடு மதிப்பீடு : 42
வயது வயது : 29
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum