பாக்.கொடி ஏற்றம்:ஸ்ரீராமசேனாவை தடைச்செய்ய எதிர்கட்சிகள் கோரிக்கை

Go down

பாக்.கொடி ஏற்றம்:ஸ்ரீராமசேனாவை தடைச்செய்ய எதிர்கட்சிகள் கோரிக்கை

Post by முஸ்லிம் on Thu Jan 12, 2012 7:32 pm

பிஜாப்பூர்:கர்நாடகா மாநிலம் பிஜாப்பூரில்
தாசில்தார் அலுவலக வளாகத்தில் பாகிஸ்தான் கொடியை ஏற்றிய ஸ்ரீராமசேனாவை
தடைச் செய்யவேண்டும் என கர்நாடாகா மாநிலத்தில் பல்வேறு எதிர்கட்சிகள்
கோரிக்கை விடுத்துள்ளன.

காங்கிரஸ், மத சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளன.

ஸ்ரீராமசேனா தேசவிரோத செயலை புரிந்தது
நிரூபணமான சூழலில் அந்த அமைப்பை தடைச்செய்ய வேண்டும் என்றும், அந்த
அமைப்பின் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தெற்கு கன்னட
காங்கிரஸ் தலைவரும், பந்த்வால் எம்.எல்.ஏவுமான ராமநாத் ராஜு கோரிக்கை
விடுத்துள்ளார்.

சிறுபான்மை மக்களுக்கு எதிராக கலவரத்தை
உருவாக்கி வாக்கு சேகரிக்க பா.ஜ.கவும், ஆர்.எஸ்.எஸ்ஸும் முயல்வதாக முன்னாள்
முதல்வரும், மதசார்பற்ற ஜனதாதளத்தின் தலைவருமான ஹெச்.டி.குமாரசுவாமி
குற்றம் சாட்டியுள்ளார்.
"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8816
Points Points : 42
வயது வயது : 29
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum