நீரோ சூழ்ச்சியைப் பாஜக செய்கிறது - காதர் மொஹிதீன் குற்றச்சாற்று!

Go down

நீரோ சூழ்ச்சியைப் பாஜக செய்கிறது - காதர் மொஹிதீன் குற்றச்சாற்று!

Post by முஸ்லிம் on Sat Jan 14, 2012 9:13 pm

"ரோமில் நீரோ மன்னன் செய்த சூழ்ச்சியை இந்தியாவில் பா.ஜ கட்சி செய்கிறது" என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் கே.எம்.காதர் மொஹிதீன் பாஜக மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொது செயலாளரும் தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொஹிதீன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்னும் நூற்றாண்டைக் கடந்து இந்திய ஆரசியல் அரங்கில் நடந்து வரும் பேரியக்கத்திற்கு ஒரு பாரம்பரியம் இருக்கிறது.

தேர்தல் காலங்களில் பிற அரசியல் கட்சிகளுடன் உறவு மற்றும் உடன்பாடு கொள்வதற்கு முன், அந்தப் பிற அரசியல் கட்சிகளின் கொள்கைகள், திட்டங்கள, நடைமுறைகள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொள்கைகளுக்கு அந்தக் கட்சிகளின் கொள்கைகள் நெருக்கமுடையனவாக அமைதல் வேண்டும்; அவைகளின் கொள்கை, திட்டம், நடைமுறைகளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உடன்பட்டதாக இருக்க வேண்டும்.

முஸ்லிம் லீக் இப்படிப்பட்ட உடன்பாட்டை நோக்குங்காலை, அந்தப் பிற அரசியல் இலக்கங்களின் கொள்கை - கோட்பாடுகள் முஸ்லிம் சமுதாயத்துக்கும் மற்றுமுள்ள சிறுபான்மை சமுதாயங்களுக்கும், பிற்படுத்தப் பட்டுள்ள சமூகங்களுக்கும் ஏற்புடையவையாக இருக்கின்றனவா என்பதையும் ஆய்வு செய்வது முஸ்லிம் லீகின் பாரம்பரிய நடைமுறையாகும்.

இந்த அடிப்படையில்தான் கேரளாவில் காங்கிரசுடனும், தமிழகத்தில் தி.மு.க. உடனும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறவு, உடன்பாடு என்று வைத்து அரசியல் அரங்கில் பயணித்து வருகிறது.

பாரதீய ஜனதா கட்சியும் ஓர் அரசியல் இயக்கந்தானே! அதனுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏன் உறவோ, உடன்பாடோ கொள்ளக்கூடாது? என்று வினாத்தொடுப்பவர்களும் இருக்கிறார்கள்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகைப் பொருத்தமட்டிலும் பாரதீய ஜனதா கட்சியுடனோ, அந்தக் கட்சியுடன் உடன்பாடு கொண்டுள்ள சிவசேனா, அகாலி தளம் போன்றவையுடனோ அரசியல் உறவு வைப்பதில்லை என்பது கொள்கை முடிவாகும்.

பா.ஜ.க. சிறுபான்மையினர் உரிமைகளுக்கு எதிரான கட்சி என்பதும், குறிப்பாக இந்திய முஸ்லிம்களுக்கு எல்லா வகையிலும் முற்றிலும் எதிரான கட்சி என்றும் உலகறிந்த விஷயங்களாகும்.

அந்தக் கட்சியின் அன்றாட நடவடிக்கை ஒவ்வொன்றும் இதற்கு அத்தாட்சியாகவே அமைந்து வருகிறது.

.....மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் கூடிய அமைச்சரவையில் 2011 டிசம்பர் 22-ல் பிற்பட்டோருக்கான 27 சதவீதத்தில் இருந்து முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை யினருக்கு 4.5 சதவீதம் இடஒதுக்கீடு தருவதற்குத் தீர்மானித்து, ஜனவரி 1 முதல் அமுலாக்கியது. இந்த அரசாணையை பாராளு மன்றத்தில் பா.ஜ. கட்சியினர்கிழித்து எறிந்து பெரும் ரகளை விளைவித்தனர்.

.....விரைவில் நடக்கவுள்ள உ.பி. தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மத்திய சட்டத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மிஸ்ரா கமிஷன் பரிந்துரை செய்ததற்கு ஏற்ப 9 சதவீதம் முஸ்லிம்களுக்கு தருவோம் என்று கூறியதுதான் தாமதம், பா.ஜ.க. பிரச்சார பீரங்கி, சந்நியாசினி உமாபாரதி எகிறித் துடித்துக் குதித்து, இந்தியாவில் இன்னொரு நாட்டுப் பிரிவினைக்கு இடஒதுக்கீடு மூலம் காங்கிரஸ் வித்திடுவதாகப் பேசி, மக்களைக் குழப்பத் தொடங்கி விட்டார்.

.....மத்தியப் பிரதேசத்தில் மாடறுப்புத் தடைச் சட்டம் கொண்டு வந்துள்ள பாரதீய ஜனதா கட்சி அரசு, அங்குள்ள முஸ்லிம்களை வேட்டையாடத் துவங்கியிருக்கிறது.

"தி ஹிண்டு" நாளிதழ் (11-1-2012) செய்தி இது:

சென்ற வாரம் பஜ்ரங்தள தொண்டர்கள், ஒருமுஸ்லிம் மாட்டு வியாபாரியான அனிஸ் குரைஷி என்பவரை பசுமாடுளை அறுவைக்காக அனுப்பினார் என்று குற்றஞ்சுமத்தி, மொட்டை அடித்து ஒரு புருவத்தையும் ஒரு பக்க மீசையையும் சிரைத்து தண்டித்துள்ளார்கள் (தி ஹிண்டு பக்.4 - (11-1-2012). மாடறுப்புத் தடைச் சட்டம், முஸ்லிம் சமுதாயததை வேரறுக்கவே நிறைவேற்றி இருப்பதுபோல, அங்குள்ள இந்துத்துவ சக்திகள் செயல்படத் துவங்கியுள்ளன.

......ஜனவரி 1-ம் தேதி பீஜப்பூர் மாவட்டம் சிந்தகி தாசில்தார் அலுவலகத்தில் இரவு நேரத்தில் பாகிஸ்தான் தேசியக் கொடியை பஜ்ரங்தள இந்துத்துவ பாரதீய ஜனதா தொண்டன் ஏற்றி வைத்து, காலையில் அவனே கூட்டத்தைத் திரட்டி, முஸ்லிம்கள் பாகிஸ்தான் கொடியை ஏற்றியுள்ளனர் என்று கூறி, சாலை மறியல், கடையடைப்பு நாடகத்தை நடத்தியுள்ளான். கர்நாடகா காவல் துறை அந்தக் கும்பலைச் சேர்ந்த ஏழு பேரை கைது செய்து விசாரணை செய்ததில், முஸ்லிம்களுக்கு எதிராக வகுப்புக் கலவரத்தைத் தூண்டுவதற்காகவே இப்படிச் செய்தோம் என்று ஒப்புதல் வாக்கு மூலம் தந்திருக்கிறான்.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது ரோமானியப் பேரரசன் நீரோ ஞாபகந்தான் வருகிறது. ரோம் நகரை அவனே ஆள் வைத்துக் கொளுத்தி விட்டு, அப்பிராணி கிறிஸ்தவர்கள் மீது அந்தப் பழியைச் சுமத்தி, கிறிஸ்துவர்களை கொடுமைப்படுத்தினான். ஏனென்றால் ரோம் நகரத்து மக்கள் கூட்டங் கூட்டமாக கிறிஸ்துவ மதத்தில் சேர்ந்து கொண்டிருந்தார்கள். இதனைப் பொறுக்காமல், கிறிஸ்துவ மதம் பரவுவதைத் தடுத்திட சதி செய்து நீரோ இந்த நாடகத்தை நடத்தினான்.

ஆனால், அந்த நீரோ பின்பற்றிய மதம் இன்றைக்கு இல்லை; கிறிஸ்துவத்தின் தலைமை பீடமாக இன்றைய ரோம் - அதில் உள்ள வத்திகான் இருக்கிறது.

இந்தியாவிலும், உலக அளவிலும் இஸ்லாம் மிக வேகமாகப் பரவி வரும் மார்க்கமாக இருப்பதால் அதன் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தும் நீரோ சூழ்ச்சியை இங்குள்ள பாரதீய ஜனதா கட்சி செய்து கொண்டிருக்கிறது.

சூதும் சூழ்ச்சியும் சூரியனையோ, சந்திரனையோ மறைத்து விட முடியாது! அவற்றின் ஒளியைக் குறைத்து விட இயலாது!"

மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

-க.கா.செ

"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8763
Points Points : 42
வயது வயது : 29
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum