ஜெ-மோடி சந்திப்பு ரத்து: கே.என்.நேரு கொடுத்த சிக்னல்?

Go down

ஜெ-மோடி சந்திப்பு ரத்து: கே.என்.நேரு கொடுத்த சிக்னல்?

Post by முஸ்லிம் on Mon Jan 16, 2012 7:08 pm

துக்ளக் இதழின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கு கொள்ள பாஜக தலைவர் அத்வானி, குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி ஆகியோர் தமிழகம் வந்து இருந்த நிலையில் நேற்று இரவு அத்வானி, மோடி ஆகியோர் ஜெயலலிதாவை போயஸ் தோட்டத்தில் சந்தித்துப் பேச உள்ளனர் என்று செய்தி வெளியாகியது.

ஜெயலலிதாவுடனான பாஜக முக்கிய தலைவர்களின் சந்திப்பின் போதே பாஜக - அதிமுக கூட்டணிக்கு அச்சாரம் போடப் படும் என்று பலரும் எதிர்பார்த்து இருந்த நிலையில், பாஜக தலைவர்களுடனான சந்திப்பைத் திடீரென ரத்துச் செய்து விட்டார் ஜெயலலிதா.

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக் குழுவில் பேசிய ஜெயலலிதா, "2014 ல் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் சக்தியாக அதிமுக விளங்கும்" என்று தெரிவித்து இருந்தார். அதே போன்று நேற்று துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் பேசிய பத்திரிக்கையாளர் சோ.ராமசாமியும் "2014 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டால் ஜெயலலிதா பிரதமராக பாஜக ஒத்துழைக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.

இதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருக்கக் கூடும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் தேர்தலில் போட்டி போடவே வேட்பாளர்களைத் தேடிக் கொண்டு இருக்கும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைப்பதால் பாஜகவுக்குத்தான் லாபமே அன்றி அதிமுகவுக்குப் பயனில்லை. இதனால் சிறுபான்மையினரின் ஓட்டுகள் ஒட்டு மொத்தமாக அதிமுக இழக்க வேண்டிய நிலை ஏற்படுவதோடு, "மத சார்பற்ற கூட்டணி" என்ற பெயருடன் எதிரணி ஒன்றிணைந்து ஒட்டுமொத்தமாக சிறுபான்மையின ஓட்டுகளை அள்ளிச் செல்லும். இது ஜெயலலிதாவுக்குத் தெரியாததும் அன்று. மேலும் அண்மையில் திமுகவின் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, "மேற்கு வங்கத்தில் நடைபெற்றது போன்று இங்கும் நடைபெறும்" என்று மம்தா - காங்கிரஸ் லடாய் குறித்து சூசகமாகத் தெரிவித்தார்.
திமுகவும் வரப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசைக் கழட்டி விட்டு விட்டு, தேமுதிகவுடன் கூட்டணி அமைக்கக் கூடும் என்று செய்திகள் வரும் நிலையில் ஜெயலலிதா - பாஜக தலைவர்கள் சந்திப்பு ரத்தானதற்கு நேருவின் சிக்னலும் காரணமாக இருக்கக் கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது. மேலும் 2014 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள தேர்தலுக்குள் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ கூடும் என்ற நிலையில் இப்போதே பாஜகவுடன் நட்பைக் கடைப் பிடிப்பதால் மத்திய அரசுடன் தேவையற்ற மோதல்கள் வரக் கூடும் என்ற அச்சமும் ஜெயலலிதாவுக்கு இருக்க வாய்ப்புள்ளது.

2014 தேர்தலில் பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது போனால் ஜெயலலிதாவைப் பிரதமராக்க பாஜக ஒத்துழைக்க வேண்டும் என்று தமது விழாவுக்கு வந்த முன்னணி பாஜக தலைவர்களும் பிரதம வேட்பாளர்களுமான அத்வானி மற்றும் மோடி முன்னிலையிலேயே சோ பேசி இருப்பதன் மூலம் 2014 ல் பாஜக தலைமையிலான ஆட்சி அமைவது சந்தேகம் தான் என்ற கருத்தை வலுப் படுத்தும் நிலையில் சோவின் இக்கருத்து முன்னரே ஜெயலலிதாவுக்குத் தெரிவிக்கப் பட்டு அத்வானி மோடி சந்திப்பைப் புறக்கணித்து இருக்கக் கூடும் என்றும் தெரிகிறது.

அத்வானி மற்றும் மோடி ஆகியோருடனான சந்திப்பு பத்திரிக்கைகளில் அதிமுக - பாஜக கூட்டணி என்று வெளி வரும் நிலையில் மதவாதக் கூட்டணி என்ற முத்திரை குத்தப் பட்டு கம்யூனிஸ்ட் முதலான கட்சிகள் அதிமுகவைப் புறக்கணிக்க நேரிடும். இதையெல்லாம் முன்னரே கணித்து, தெளிவான திட்டத்துடனே அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, பாஜக தலைவர்களுடனான சந்திப்பைத் தவிர்த்துள்ளதாக கருத முடிகிறது.


பாஜக தலைவர்கள் - ஜெயலலிதா சந்திப்பு நிகழவில்லை என்றாலும்கூட துக்ளக் விழாவில் "அதிமுகவும் பாஜகவும் இயல்பான கூட்டணியில் உள்ளோம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை" என்று பாஜக தலைவர் அத்வானி பேசியிருப்பதிலிருந்தும் முன்னரே அவர்களுக்குள் பேசி வைத்து இந்தச் சந்திப்பை அவர்கள் வேண்டுமென்றே தவிர்த்துள்ளதாகவும் எண்ண வேண்டியுள்ளது. தற்போது வெளிப்படையான கூட்டணி அறிவிப்பைத் தெரிவிக்காமல் சூழலுக்கேற்ப தேவைப் பட்டால் தேர்தலுக்குப் பின்னர் பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்று ஜெயலலிதா முடிவெடுத்து இருக்கக் கூடும்.

எல்லாவற்றுக்கும் மேலாக சோ சொன்னது போல, மாறி வரும் சூழலில் காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டு கட்சிகளுக்குமே அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் மூன்றாவது அணி அமைத்து, தானே பிரதமர் நாற்காலியைப் பிடித்து விடலாம் என்ற பலமான யோசனை ஜெயலலிதாவின் எண்ணத்தில் தோன்றியதால்கூட இச்சந்திப்பைத் தவிர்த்திருக்க வாய்ப்புள்ளது.

எது எப்படியிருப்பினும் இப்போதைய நிலையில் பாஜக-அதிமுக கூட்டணி அறிவிக்கப்படுமானால், அது எல்லா வகையிலும் நேரடியாக தமிழகத்தில் அதிமுகவுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உறுதி. பிடி கொடுக்காமல் சற்று தள்ளி நின்றால், "2014 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்படும் நிலையில், நேரடியாக பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதனைப் பிரதமர் நாற்காலியில் அமர்த்தலாம்; அல்லது எவருக்கும் ஆட்சியமைக்க இயலா நிலையில் பாஜக ஆதரவுடன் தானே பிரமர் நாற்காலியில் அமரலாம்" என்பதே ஜெயலலிதாவின் திட்டம்! அதற்கான வியூகம் சரியான வகையில் வகுக்கப்பட்டுள்ளதன் அடையாளமே அதிமுக-பாஜக தலைவர்களின் சந்திப்பு தவிர்ப்பின் பின்னணி! இதனைத் திமுக, காங்கிரஸ் முதலான எதிரணிகள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8966
Points Points : 42
வயது வயது : 30
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum