ஈரானிய அறிஞர்கள் படுகொலைக்கு எதிரான மனு(Petition)

Post new topic   Reply to topic

View previous topic View next topic Go down

ஈரானிய அறிஞர்கள் படுகொலைக்கு எதிரான மனு(Petition)

Post by முஸ்லிம் on Wed Jan 18, 2012 7:34 pm

அறிஞர்கள், கல்வியாளர்கள்,
பத்திரிகையாளர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் ஈரானிய தொழில்நுட்ப
மற்றும் அறிவியல் வல்லுநர்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருவதைக்
கண்டனம் செய்துள்ளனர். மேலும் இக்கொடிய கொலைகளுக்கு எதிராக பிரபல அறிஞர் யுவான் கோல் பெட்டிஷனை(மனு) அளித்துள்ளார்.

இதுகுறித்து யுவான் கோல் கூறும்போது;
“இம்மாதம் 11-ஆம் தேதி, டெஹ்ரானில் ஜன நெருக்கடியான இடத்தில் முஸ்தஃபா
அஹ்மதி ரோஷன் என்ற விஞ்ஞானி மற்றும் அவரது ஓட்டுநரும் கார்
குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்தனர். கடந்த இரண்டு
வருடத்தில் நான்கு ஈரானிய விஞ்ஞானிகள் இதே முறையில் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தப் படுகொலைகள் அனைத்தும் அரசியல்
நோக்கத்தோடு திட்டமிட்டு பிரச்சாரம் நடைபெற்று வருகின்றது தெரிய
வருகின்றது. ஈரானின் அணு ஆலைகள் திட்டத்திற்கு எதிரான நாடுகள்தாம் இந்தப்
படுகொலைகளுக்கு காரணமானவர்கள் என்று ஊடக அறிக்கைகள் மற்றும் அரசியல்
ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த படுகொலைகளுக்கு பின்னால் வெளிநாட்டு
சக்திகள் கை வண்ணங்கள் உள்ளன என்ற பொது அறிக்கைகளின் கூற்று உண்மையானால்,
அப்பாவி உயிர்களைக் காவு கொல்லும் வகையிலான இந்த இரகசிய நடவடிக்கைகள்
மற்றும் படுகொலைகளைச் செய்யும் அரசுகளுக்கு நாங்கள் இந்தப்
பெட்டிஷனைப்(மனு) போடுகின்றோம்.

அறிஞர்கள், கல்வியாளர்கள்,
பத்திரிகையாளர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் என்ற அடிப்படையில் கொலை
செய்யும் இந்தக் கயமத்தனத்தை உடனடியாக நிறுத்தவேண்டும். இது போன்ற
தீவிரவாதச் செயல்களினால் பிராந்திய மோதல்களும் அதன் மூலம் ஒரு இராணுவ
மோதல்களும் ஏற்பட வழி வகுக்கும்.

ஈரான் அணுசக்தி திட்டத்தில் நமது நிலைபாடு
என்ன என்பதை விட இந்தப் படு கொலைகள் மிகவும் மூர்க்கத்தனமானதாகும். எந்த
ஒரு மனித உரிமைகளையும் மதிக்காமல், தேசிய மற்றும் உலகளாவிய சட்டங்களை கண்டு
கொள்ளாமல் அறிஞர் பெருமக்களைக் கண்மூடித்தனமாகக் கொலை செய்வதை ஈரானின்
அணுசக்திக்கு எதிரான நாடுகள் நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள்.

இது போன்ற கொலைகள் நிறுத்தப்பட வேண்டும்.
இது போன்ற படுகொலைகளால், அறிஞர்களும் பொது மக்களும்தான்
பாதிக்கப்படுகின்றார்கள். இது போன்ற படுகொலைகளினால் பொது மக்கள் கூட பலி
வாங்கும் நடவடிக்கைகளை எதிர்பார்க்கின்றார்கள். ஆனால் நாம் இது
மாதிரியல்லாத நல்ல ஒரு உலகத்தில் வாழ்ந்து வருகின்றோம். அப்பாவிகளைக்
கொல்வது அல்லது குற்றவாளிகளைக் கூட மனித உரிமைகளைக் கருத்தில் கொள்ளும்
சரியான முறையினை மேற்கொள்ளாமல் கொல்வது என்பதினை செய்வது அது ஒரு சக்தியாக
இருந்தாலும் அல்லது ஒரு அரசாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக எமது
எதிர்ப்பினை இங்கு பதிவு செய்கின்றோம்.

இரகசிய இலக்கு படுகொலைகள் தின செய்திகளாக மாறினால், யாரும் இந்த உலகத்தில் பாதுகாப்பாக இருக்க இயலாது.” என்று கூறியுள்ளார்."உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8636
Points Points : 42
வயது வயது : 29
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You can reply to topics in this forum