மூட்டை மூட்டையாக வெடிபொருட்கள்: தீவிரவாதி தலைமறைவு!

Post new topic   Reply to topic

View previous topic View next topic Go down

மூட்டை மூட்டையாக வெடிபொருட்கள்: தீவிரவாதி தலைமறைவு!

Post by முஸ்லிம் on Fri Jan 20, 2012 7:30 pm

வெடி
பொருட்கள் ரகசிய இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலைத்
தொடர்ந்து தமிழகக் காவல்துறை நடத்திய தீவிர வேட்டையில் மூட்டை மூட்டையாக
வெடி பொருட்கள் சிக்கியுள்ளது.





இது தொடர்பான செய்தியாவது,

வேலூர்
அருகேயுள்ள பகுதி சின்ன பாலபாக்கம். இந்த ஊருக்கு சட்ட விரோதமான முறையில்
வெடி மருந்து பொருட்கள் கடத்தி வரப்படுவதாக காவல்துறைக்கு கிடைத்த
தகவலையொட்டி, இங்கு காவல்துறையினர் அதிரடி சோதனையை நடத்தினர்.
இச்சோதனையில் ஒரு வீட்டில் மூட்டை மூட்டையாக வெடி பொருடகள்
கைபற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட வெடி பொருட்களை
சோதனையிட்டதில், 350 கிலோ அலுமினியம் நைட்ரேட் மற்றும் 400 டெட்டனேட்டர்கள்
பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு காவல்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது. இது
தொடர்பாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் வெடி பொருட்கள் பதுக்கி
வைக்கப்பட்டிருந்த வீடு ஜெகந்நாதன் என்பவருக்கு சொந்தமானது என்ற விபரம்
தெரியவந்துள்ளது. தலைமறைவாகி விட்ட ஜெகந்நாதனை பிடிக்க காவல்துறை தீவிர
தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளது. இச்சம்பவத்தால் வேலூர் பகுதியில்
பரபரப்பு நிலவுகிறது.

இவ்வளவு வெடி பொருட்களை பதிக்கி
வைக்கப்பட்டதன் காரணம் என்ன? ஏதேனும் தீவிரவாத நடவடிக்கைகள்
திட்டமிடப்பட்டுள்ளதா என்பன போன்ற கேள்விகளுக்கெல்லாம் ஜெகந்நாதன் கைது
செய்யப்பட்டால் தான் விடை கிடைக்கும் என்பதாக கூறப்படுகிறது.





"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8636
Points Points : 42
வயது வயது : 29
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You can reply to topics in this forum