தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஆஸ்கார் விருது பெற்ற இயக்குநர் ஆலிவர் ஸ்டோனின் மகன் இஸ்லாத்தை தழுவினார்!

Go down

ஆஸ்கார் விருது பெற்ற இயக்குநர் ஆலிவர் ஸ்டோனின் மகன் இஸ்லாத்தை தழுவினார்!  Empty ஆஸ்கார் விருது பெற்ற இயக்குநர் ஆலிவர் ஸ்டோனின் மகன் இஸ்லாத்தை தழுவினார்!

Post by முஸ்லிம் Thu Feb 16, 2012 6:02 pm

டெஹ்ரான்:பிரபல இயக்குநரும், உலகப்புகழ்
பெற்ற ஆஸ்கர் விருதை பெற்றவருமான ஆலிவர் ஸ்டோனின் மகன் ஸீன் ஸ்டோன்
இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஈரானின் நகரமான இஸ்பஹானில் வைத்து ஸீன்
இஸ்லாத்தில் நுழைவதற்கான வார்த்தைகளை(ஷஹாதா கலிமா) கூறி தன்னை முஸ்லிமாக
மாற்றிக்கொண்டார். ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் இத்தகவலை
வெளியிட்டுள்ளது.

ஸீன் தனது பெயரின் துவக்கத்தில் ‘அலி’ என்ற வார்த்தையை(இஸ்லாத்தின் நான்காவது கலீஃபாவின் பெயர்) இணைத்துக் கொண்டார்.

ஸீன் தனது தந்தை ஆலிவர் ஸ்டோன் இயக்கிய
திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். மேலும் சிறந்த ஆவணப்
படங்களையும் தயாரித்துள்ளார். ஸீனின் தந்தையான ஆலிவர் ஸ்டோன் ஒரு யூதர்
ஆவார். அவரது தாயார் கிறிஸ்தவர். ஸீன் தான் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக
ஏற்றுக்கொண்டதற்கான காரணத்தை கூறவில்லை.

ஸீன் தந்தை ஆலிவர் ஸ்டோன் 1980 களிலும்,
1990 துவக்கத்திலும் தொடர்ந்து வியட்நாம் போர் தொடர்பான திரைப்படங்களை
இயக்கியுள்ளார். 3 அகாடமி விருதுகளையும் பெற்றுள்ளார்.

ஸீன் ஈரானுக்கு உறுதியான ஆதரவாளர்.
டொராண்டோ ஃபிலிம் பெஸ்டிவலில் ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கான உரிமையை
ஆதரித்து பேசினார். இஸ்ரேலின் அச்சுறுத்தலை முறியடிக்க அணுசக்தி தேவை என
ஸீன் குறிப்பிட்டார்.

ஆஸ்கார் விருது பெற்ற இயக்குநர் ஆலிவர் ஸ்டோனின் மகன் இஸ்லாத்தை தழுவினார்!  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10927
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீர்ர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை தழுவினார், அம்லா காரணமா ?
» இளம் வயதில் மைக்ரோஸாஃப்ட் விருது பெற்ற பெண் பொறியாளர் மரணம்!
» "சஞ்சீவ் பட் உண்மையான நாயகன்" - பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட் புகழாரம்.
»  சென்னையில் கடத்தப்பட்டதொழிலதிபர் மகன் மீட்கப்பட்டார்!
» கடாபியின் மகன் கூட்டுப்படை தாக்குதலில் இறந்துவிட்டார்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum