பிறந்த இடம் தேடி .................... !

Go down

பிறந்த இடம் தேடி .................... !

Post by srivai.khader on Thu Jul 18, 2013 12:44 pm

பிறந்த இடம் தேடி பயணம் –இது
உறவுகளோடு உரையாடும் நேரம்

உறவின் அருமை அறியாத தூரம்
உரிமை கொண்டு உதவும் பாசம்

பிழைப்பு தேடி நகரத்தின் வாசம்
உழைப்பு உண்டு உயர்வு இல்லை

ஏதிர் கொள்ளும் பல எதிர்பார்ப்புகள்
நிறைவேற்ற பணம் போதாத நிலை

கடினமான உழைப்பு அன்றே –இன்னும்
வந்த கஷ்டம் மட்டும் கரையவில்லை

பெற்றவர்களின் நிகழ் காலம் –இன்னும்
பிள்ளைகளின் வளம் நல்ல எதிர்காலம்

கல்வி மட்டுமே நாளை கலங்கரை விளக்கு
காசும், புகழும் உன்னை காண வரும் தேடி

பிள்ளைகளின் வாழ்வு அமைந்தது சிறப்பு
மாற்றத்தை தந்தான் இறைவனும் கோடி

வாழ்கையில் தந்தது இதுவரை ஏற்றம்
காலம் இறுதியை களித்திட எண்ணி

சொந்த் மண்ணுக்கு திரும்பும் நாளை
சுந்தரமாய் அமைய இறைவனை நாடி

பிறந்த இடம் தேடி கை பிடித்து தென்றலோடு
பெருமையாக இந்த பயணம் ................. !

-ஸ்ரீவை.காதர்.
மு.அ.காதர்.
srivai.khader
srivai.khader
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
ஸ்கோர் ஸ்கோர் : 2946
Points Points : 26
வயது வயது : 57

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum