தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

நம் மேலான கடமை !

Go down

நம் மேலான கடமை !   Empty நம் மேலான கடமை !

Post by srivai.khader Sun Dec 22, 2013 8:02 pm

உன்னை கருவில் சுமந்து
அவர்கள் கனவாய் வாழ்ந்தார்கள்

நிறைந்த பாசத்தை நெஞ்சில் வைத்து
உனக்கு பாலாய் புகட்டினார்கள்

உன் பிஞ்சு மொழி பேச்சை கேட்டு
உயிர் மூச்சாய் உருகினார்கள்

அழகு நடை கண்டு கை பிடித்து
நிலவாய் சிரித்து மகிழ்ந்தார்கள்

மார்க்க கல்வி ,ஏட்டு கல்வி கற்க
கண்டிப்புடன் வழி காட்டினார்கள்

உன் ஏதிர் காலம் இனிதாக அவர்கள்
தன் நிகழ் காலத்தை தொலைத்தார்கள்

நாம் செய்ய வேண்டிய கடமை என்ன ?
என்ன செய்து கொண்டு இருக்கிறோம் !

கட்டிய மனைவி மோகத்தில் இன்னும்
மகிழ்சியான வாழ்க்கையில் உன் குடும்பம்

வளைந்த முதுகுடன் வயோதிகத்தை தாங்கி
வளையாத பாசத்துடன் உன் மீது இன்றும்

இல்லாமை ஏன் இயலாமையும் சேர்ந்து
உதவிக்காக தூங்கிய இமைகளுடன்

தருவாய் என்ற நம்பிகை ஒன்றே
அவர்கள் நகரும் நாட்கள் கண்ணீருடன்

உன் இளமையை அன்று தாங்கினார்கள்
இன்று அவர்கள் முதுமை உனக்கு சுமையா ?

இறைவனை அஞ்சினால் செய்வோமா ?
நமக்கும் நாளை இதே நிலைதான் மறவாதே

பெற்றவர்களை காப்பாற்றுவது இறுதி வரை
நம் கடமை என்பதை தெளிவாக்கு

அவர்கள் இறுதி பயணம் வரை வேண்டும்
உன் உறுதி மாறாமல் நிலையாக !
இன்னும் நிறைவாக !

இது நம் மேலான கடமையும் கூட .............


ஸ்ரீவை.காதர்.
srivai.khader
srivai.khader
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
ஸ்கோர் ஸ்கோர் : 4827
Points Points : 26
வயது வயது : 62

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum