தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஒரு கோரிக்கை! அவசரத் தந்தியனுப்பி உதவுங்க‌ள்!

Go down

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஒரு கோரிக்கை! அவசரத் தந்தியனுப்பி உதவுங்க‌ள்! Empty 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஒரு கோரிக்கை! அவசரத் தந்தியனுப்பி உதவுங்க‌ள்!

Post by முஸ்லிம் Sat Feb 19, 2011 6:20 pm

அரசாங்கத்திற்கு அவசரத் தந்தியனுப்பி சமூக நலனுக்காக‌ உதவுங்க‌ள்!



இந்தியாவில் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி சென்ற மாதம் முதல் தொடங்கப்பட்டது. 120 கோடிக்கு மேற்பட்ட மக்களை தனித்தனியாக கணக்கெடுத்து, அவர்களுக்கு அடையாள அட்டையும் வழங்குவது உலகிலேயே இதுதான் முதல் முறை. எந்தவொரு கிராமமும் விட்டுப்போகாத அளவுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கணக்கெடுப்புடன், முதல் முறையாக தேசிய மக்கள் தொகை பதிவேடும் தயாரிக்கப்படுறது. இந்தியாவின் மிகப்பெரிய திட்டமாக இது வகுக்கப்பட்டு மிக நுட்பமாக நிறைவேற்றப்படுகிறது.







குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலிடம் பதிவு செய்வதன் மூலம் இப்பணி தொடங்கப்பட்டது.



o தற்போது நடத்தப்படும் 2011-க்கான மக்கள் தொகை கணக்கெடுப்பில், இந்தியாவின் மக்கள் தொகை 120 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மொத்த பரப்பளவில் 2.7 சதவிகித பரப்பளவைக் கொண்டுள்ள இந்தியாவில், உலக மக்கள் தொகையில் 17.5 சதவிகித மக்கள் வசிக்கின்றனர். பல மொழிகள் பேசும் மக்கள் வாழும் நம் நாட்டில் 28 மாநிலங்கள், 7 யூனியன்கள், 640 மாவட்டங்கள், 7,742 நகரங்கள், 6 லட்சத்து 8 ஆயிரத்து 786 கிராமங்கள் மற்றும் 30 கோடிக்கும் அதிகமான வீடுகள் இந்தியாவில் உள்ளன.




o நடந்து வரும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி இந்தியாவில் 15 வது முறையாக நடத்தப்படுகிறது. இதில் ஒவ்வொரு தனி மனிதன் குறித்த பல்வேறு தகவல்களும் பதிவு செய்யப்படும். 15 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் அடையாள அட்டையும், அடையாள எண்ணும் வழங்கப்படும். மேலும் அடையாள அட்டையில் புகைப்படம், அவரது கைரேகை ஆகியவை பதியப்படும். அது மட்டுமின்றி, ஒவ்வொருவரின் கண் விழிகளையும் பதிவு செய்வது குறித்தும் ஆலோசனை நடந்து வருகிறது.



o இந்த‌ மக்கள் தொகை கணக்கெடுப்பில் புதிய‌ முறையாக செல்போன்/லேண்ட்லைன் போன், கம்ப்யூட்டர், இன்டர்நெட் வசதி, வாகன வசதி, மின்சார வசதி, குடிநீர் பயன்பாடு, கழிவுநீர் வசதி, எரிவாயு இணைப்பு, மணமான தம்பதிகளின் எண்ணிக்கை, மாத வருமானம், வங்கிக் கணக்கு/சேமிப்பு, குடிசை வீடா, ஓட்டு வீடா, மாடி வீடா ஆகிய 35 தகவல்கள் இடம் பெறுகின்றன. இதில் வீடுகள் மட்டுமின்றி, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஓட்டல்கள், விடுதிகள் மற்றும் வணிக வளாகங்கள் போன்ற நிறுவனங்கள் தொடர்பான விவரங்களும் கணக்கெடுக்கப்படும். மேலும் தற்போதைய முகவரி மற்றும் நிரந்தர முகவரி என்ன, இந்தியரா அல்லது வெளிநாட்டவரா போன்ற தகவல்களும் சேகரிக்கப்படும்.



o இந்த விவரங்கள் சேகரிக்கப்பட்ட பின், விவரங்களை சேகரித்த அரசு ஊழியரும், குடியிருப்பில் இருப்பவரும் கையெழுத்து இடவேண்டும். இதற்கு ஒப்புகைச் சீட்டு ஒன்றும் குடியிருப்பில் இருப்பவருக்கு வழங்கப்படும். இந்த ஒப்புகைச் சீட்டை மக்கள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். வீடுகளில் கணக்கெடுப்பு முடிந்தவுடன், அந்த வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்படும். இந்த கணக்கெடுப்புக்கு மட்டும் சுமார் 2300 கோடி ரூபாயும், பதிவேடுகள் தயாரிப்பதற்கு ஏறக்குறைய 3550 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது அடையாள அட்டை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.



o மேலும் இந்தியாவில் ஸ்திரமாக வசிக்கும் பாகிஸ்தான் குடிமக்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டில் உட்படுத்தப்படும். அதுபோல் கணக்கெடுப்பில் இலங்கை, பர்மா அகதிகளும் இடம் பெறுவர்.




o கணக்கெடுப்பாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பாளர்கள் போர்வையில் திருடர்கள் வீடுகளில் நுழைந்து விடும் அபாயமிருப்பதால், அடையாள அட்டை இல்லாமல் வருப‌வர்களிடம் கணக்கெடுப்பு குறித்த விபரங்களை பொதுமக்கள் தெரிவிக்க வேண்டாம் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் திரு. கோபால கிருஷ்ணன் கூறியுள்ளார்.



எனவே அடையாள அட்டையுடன் கணக்கெடுப்பு பணிக்காக வரும் அரசாங்க அதிகாரிகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து தகவல்களை அளிக்க வேண்டியது அவசிய‌மாகும். இந்தத் தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். பொதுமக்கள் தங்களுடைய புகைப்படத்தையோ, வேறு நகல்களையோ கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தகவல்களை மட்டும் தெரிவித்தால் போதும். அத்துடன் விபரமறியாத மக்கள் அதிகமிருக்கும் சமூகத்தில் உள்ளவர்களுக்கான‌ சரியான விளக்கங்களை முன் கூட்டியே கொடுத்தால் அவர்களது பெயர் விடுபட்டுப் போகாமல் இருக்கும்.



மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது நாட்டில் உள்ள எல்லா கணக்கெடுப்புகளுக்கும் அடிப்படையானதாகும். எனவே மிக முக்கியமாக கவனிக்க வேண்டியவை: 



o வாடகை வீட்டில் வசிப்பவர்கள் அல்லது வீட்டின் உரிமையாளர்கள் வெளியே செல்வதாக இருந்தால், தாசில்தார்/நகராட்சி/மாநகராட்சி அலுவலகங்களில் தகவல் கொடுத்தால், மற்றொரு நாளில் கணக்கெடுப்பாளர்கள் கணக்கெடுக்க வருவர். இதனால் யாருடைய‌ பெயரும் விடுபட்டுப் போவதை தவிர்க்கலாம்.




o வெளிநாட்டு இந்தியர்கள் கணக்கெடுப்பில் இடம் பெற மாட்டார்கள். அவர்கள் மீண்டும் இந்தியாவில் குடியேறிவிட்டால், மக்கள் கணக்கெடுப்பில் விண்ணப்பித்து, தங்களது பெயரை இணைத்து கொள்ளலாம்.



இது சம்பந்தமாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் தொடர்ந்து வாழ்பவர்களை மட்டுமே மக்கள் தொகை கணக்கெடுப்பில் உட்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பதிவேட்டில் பதிவுச் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளது.



ஆனால் 'மீண்டும் இந்தியாவில் வந்து குடியேறிவிட்டால்' எனும்போது படிப்பு, தொழில், உத்தியோகம் சம்பந்தமாக மீண்டும், மீண்டும் வெளிநாடுகளில் சென்று வாழும் நிலையில் தள்ளப்பட்டுள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் தங்களை கணக்கெடுப்பு பதிவேட்டில் பதிவு செய்ய முடியாமலே போய்விடும் வாய்ப்புள்ளது. எனவே வெளிநாடு வாழ் இந்தியர்களையும் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேர்க்கக் கோரி குடியரசுத் தலைவர், சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு அவசரத் தந்தி அனுப்பி, இந்திய மண்ணின் மைந்தர்களாக வெளிநாட்டில் வாழும் எல்லோருடைய பெயரும் இந்த கணக்கெடுப்பில் இடம்பெற இந்த சிறிய உதவியைச் செய்து, சமுதாய நலனுக்கு உதவியதற்கான மிகப்பெரும் நன்மையை இறைவனிடத்தில் பெற்றுக் கொள்ளுங்கள்! 






சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு அனுப்ப வேண்டிய தந்தி வாசகம்:



Please urge the government to include emigrants also in Indian population final total





அனுப்ப வேண்டிய முகவரிகள்:
Smt. Sonia Gandhi
10, Janpath
New Delhi.
Tel. (O) : 23792263, 23019080
Tel. (R) : 23014161, 23014481
Fax : 23018651
Rahul Gandhi, MP
12, Tughlak Lane
New Delhi
Tel. (O) : 23019056, 23019080
Tel. (R) : 23795161
Fax (R) : 23012410
Tamil Nadu CM
New No.15, Old No.18,
4th Street, Gopalapuram,
Chennai 600086



பிரதமர், மற்றும் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டிய தந்தி வாசகம்:


Please include emigrants also in Indian population final total


அனுப்ப வேண்டிய முகவரிகள்:
The Prime Minister’s Office
South Block, Raisina Hill,
New Delhi,
India-110 101.
Telephone: 91-11-23012312.
Fax: 91-11-23019545 / 91-11-23016857
The President of India
Rashtrapati Bhavan
New Delhi – 110 004







(செய்திக் கோவை)

source: tntj.net
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10932
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum