வீடியோ கோப்பினை டெஸ்க்டாப் பின்னணியாக வைக்க முடியுமா?

View previous topic View next topic Go down

வீடியோ கோப்பினை டெஸ்க்டாப் பின்னணியாக வைக்க முடியுமா?

Post by முஸ்லிம் on Sat Feb 19, 2011 8:05 pm




இந்த கேள்விக்கு பதில் நூற்றுக்கு நூறு ஆம்.  இதுவரை கணிணி பயன்படுத்தி வரும் நாம் அனைவரும் டெஸ்க்டாப் பின்னணியாக நம் மனதிருக்கு பிடித்தமான புகைப்படங்களையோ, இணையத்தில் இருக்கும் சிறந்த கண்ணை கவரும் அழகிய படங்களையோ நமது டெஸ்க்டாப்இன் முகப்பு பக்கத்தில் வைத்து ரசித்து வந்திருக்கிறோம். இதை நாம் "Static Content" என கூறலாம். இன்றைய நவீன தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கும் Windows 7 இயங்கு தளத்தில் புகைப்படங்களை தானாக நேர இடைவெளியில் மாற்றும் வசதி உள்ளது. இருந்தாலும் இந்த வசதியையும் நாம் "Static Content" என்றுதான் கூற வேண்டும். 



எவ்வளவு நாட்கள் நாம் இந்த பழைய வசதியை வைத்து கொண்டு இருப்பது? புதிதாக அதுவும் நமது டெஸ்க்டாப் முகப்பு பக்கம் பிரமிப்பாக தெரிய வேண்டாமா? இந்த கேள்விகளை எல்லாம் மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டு இருக்கும் மென்பொருள் தான் "DreamScene Activator". இந்த மென்பொருளை கொண்டு நாம் நமது கணிணி முகப்பு பக்கத்தில் வீடியோ கோப்பினை சுவர்படமாக ஓட விடமுடியும். இதனால் நமது கணிணிக்கு புதியதொரு பொலிவு கிடைப்பது மிகவும் உண்மை. 









இந்த  மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும். இந்த தளத்தில் சொல்லி உள்ளது போல் நிறுவி கொள்ளவும். மேலும் விவரங்களக்கு இந்த வீடியோ கோப்பினை பார்க்கவும். http://www.youtube.com/watch?v=lex9OB-leFc&feature=related.

நன்றி : Ivan's Blog


"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
மதிப்பெண் மதிப்பெண் : 8487
மதிப்பீடு மதிப்பீடு : 42
வயது வயது : 28
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum