தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஈராக்கில் 1800 கோடி டாலரை காணவில்லை

Go down

ஈராக்கில் 1800 கோடி டாலரை காணவில்லை  Empty ஈராக்கில் 1800 கோடி டாலரை காணவில்லை

Post by முஸ்லிம் Mon Jun 20, 2011 5:28 pm

பாக்தாத்:அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு காலக்கட்டத்தில் ஈராக்கிலிருந்து 1800 கோடி டாலர் தொகை காணாமல் போயுள்ளது என அந்நாட்டின் பாராளுமன்ற சபாநாயகர் உஸாமா அல் நுஜைஃபி தெரிவித்துள்ளார்.600 கோடி டாலரை காணவில்லை என கடந்த வாரம் செய்தி வெளியாகியிருந்தது.

அமெரிக்கா மற்றும் ஈராக் தணிக்கையாளர்களிடமிருந்து 1800 கோடி டாலர் தொகையை ஈராக்கில் காணவில்லை என அறிக்கை கிடைத்துள்ளது என நுஜைஃபி அமெரிக்காவிற்கு புறப்படுவதற்கு முன்பு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

அமெரிக்க ஆக்கிரமிப்பின் துவக்க கட்டத்தில் பெருமளவிலான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.இத்தொகை ஈராக்கின் வளர்ச்சி திட்டங்களுக்கான பணமாகும்.இவை எவ்வாறு செலவழிக்கப்பட்டது என்பதற்கான ஆவணங்களும் இல்லை.இவை எங்கே சென்றது என்பது தெரியவில்லை.இதனைக்குறித்து பின்னர் விரிவாக பேசலாம்.ஈராக்கின் பணம் எங்கே சென்றது என்பது கண்டறியவேண்டியுள்ளது என நுஜைஃபி தெரிவித்தார்.

2004 ஆம் ஆண்டு புஷ்ஷின் அரசு 2000 கோடி டாலரை ஈராக்கிலிருந்து கொண்டு சென்றது.ஐ.நாவின் உணவுக்கு எண்ணெய் என்ற திட்டத்தின் கீழ் கிடைத்த நிதித்தொகைதான் இது.ஈராக் அதிகாரிகள் நாட்டின் புனர்நிர்மாணத்திற்கு அமெரிக்கா ஒப்பந்தக்காரர்களுக்கும், ஈராக் அமைச்சர்களுக்கும் பணம் அளித்ததாகவும் கருதப்படுகிறது.

2004-ஆம் ஆண்டு போடப்பட்ட சட்ட ஒப்பந்தத்தின்படி காணாமல் போன பணத்திற்கு அமெரிக்காதான் பொறுப்பு என ஈராக் வாதிடுவதாக் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகை கூறுகிறது. போதிய அவகாசம் தந்தால் பணத்தின் கணக்கை காட்டலாம் என அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.ஆனால், 3 தடவை தணிக்கை செய்தபிறகும் பணம் எங்கே சென்றது என்பதுக்குறித்து கண்டுபிடிக்க அமெரிக்காவால் இயலவில்லை.



ஈராக்கில் 1800 கோடி டாலரை காணவில்லை  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10938
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» 5 கோடி மக்களுக்கு நீதி செலுத்த முடியாத மோடி எவ்வாறு 125 கோடி மக்களைப் பாதுகாப்பார்?
» ஈராக்கில் அண்டை நாடுகள் தலையிடக்கூடாது: ஒபாமா கூறுகிறார்
» அமெரிக்க ராணுவம் வாபஸ்: ஈராக்கில் மகிழ்ச்சி கொண்டாட்டம்
» ஈராக்கில் மீண்டும் ஆயுதம் தாங்கிய குழு – அமெரிக்காவின் புதிய தந்திரம்
» மோடியின் உண்ணாவிரத நாடகத்தால் 100 கோடி விரயம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum