தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

வுழு இன்றி குர்ஆனை தொடலாமா

2 posters

Go down

வுழு இன்றி குர்ஆனை தொடலாமா Empty வுழு இன்றி குர்ஆனை தொடலாமா

Post by Thazeem Mon Jul 26, 2010 12:19 pm



விளக்கவுரை-1
குர்ஆனைத் தொடக்கூடாத நிலைகள்-

குர்ஆனைத் தொடக்கூடியவர் சிறுதொடக்கு மற்றும்

பெருந்தொடக்கிலிருந்து தூய்மையானவராக இருக்க

வேண்டும்.அதாவது உளூ இல்லதாவர்,குளிப்பு

கடமையானவர்,மாதவிடாய் பெண்கள், மற்றும் பிள்ளைப்

பேறு உதிரபோக்குள்ள பெண்கள் ஆகியோர் இறைவேதம்

குர்ஆனைத் தொடக்கூடாது.
இவ்வாறு கூறிய சஹாபா பெருமக்கள்-
1. அலி ரலியல்லாஹு அன்ஹு
2. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு
3. சஃது இப்னு அபீ வக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு
4. அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு
5 சயீது இப்னு ஜைத் ரலியல்லாஹு அன்ஹு
6. சல்மானுல் ஃபாரிஸீ ரலியல்லாஹு அன்ஹு

இதே கருத்தை கூறிய தாபிஈன்கள்-

1. அதாவு இப்னு அபீ ரபாஹ் ரஹ்மத்துல்லாஹி

அலைஹி

2. இப்னு ஷிஹாப் ஜுஹ்ரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி

3. ஹஸன் பசரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி

4. தாவூஸ் இப்னு கய்சான் ரஹ்மத்துல்லாஹி அலைஹி

5. ஸாலிம் இப்னு அப்தில்லாஹ் இப்னி உமர்

ரஹ்மத்துல்லாஹி அலைஹி

6. நக்யீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி

7. இப்னு முசய்யப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி

8. உர்வா இப்னு ஜீபைர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி

9. காஸிம் இப்னு முஹம்மத் ரஹ்மத்துல்லாஹி

அலைஹி

10.காரிஜா இப்னு ஜைத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி

11. அபூபக்கர் இப்னு அப்திர்ரஹ்மான் ரஹ்மத்துல்லாஹி

அலைஹி

12. சுலைமான் இப்னு யஸார் ரஹ்மத்துல்லாஹி அலைஹி

13.உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்

ரஹ்மத்துல்லாஹி அலைஹி (1*)

இமாம்கள் :

ஹனபீ(2*), மாலிகீ(3*), ஷாபிஈ(4*),ஹன்பலீ(5*)

*1 இமாம்பைஹீ அவர்களுக்குரிய

மஃரிஃபதுஸ்ஸூனனீ வல் ஆஃதார்(1/185)

* இமாம் பைஹீ அவர்களுக்குரிய சுனனுல் குப்ரா (1/88)

இப்னுல்கய்யீம் அவர்களுக்குரிய இஃலாமுல்

மூகியீன்(1/23)

*2 . ஹிதாயா (1/31) மஜ்மவுல் அன்ஹுர் (1/25)

அல்பஹ்ருர் ராயிக் (1/211)

*3 . மஊனா (1/160) அக்துல் ஜவாஹிர்(1/62)

*4 . முஹஃத்தப் (1/32) ரவ்ழதுத்தாலிபீன் (1/190)

முங்னில் முஹ்தாஜ் (1/36)

*5. முக்னிஃ (1/56) முன்தஹல் இராதாத் (1/27)

அர்ரவ்ழுல் முரப்பஃ (1/26)

ஆகிய நான்கு மத்ஹபுகளைச் சார்ந்த போற்றுதலுக்குரிய

இமாம்களும்இக்கருத்தையே வலியுறுத்தியுள்ளார்கள்.

*************************

பரிசுத்தமான்வார்கள் தான் குர்ஆனைத் தொடவேண்டு

மென்பதற்கு அடிப்படை ஆதாரங்கள் மூன்று

1.இறைமறை வேதம் அல்குர்ஆன்

2.இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ்ஸல்லம்

அவர்களின் பொன்மொழிகளான ஹதீஃத்

3.நபித் தோழ்ர்களின் ஏகோபித்த முடிவான இஜ்மாஃ

குர்ஆன்:

இறைவன் கூறினான் :
لايمسه الا الـمطهرون – الواقعة : 79

தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்)

குர்ஆனைத் தொட மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 56-79)

இச்செய்தியின் மூலம் இறைவன் குர்ஆனின் மாண்பை

வெளிப்படுத்துகிறான்.தூய்மையானவர்கள் தான் என்று

கூறி ஓரு வரைமுறையை இறைவன் விதித்துவிட்டதால்

மற்றவர்கள் குர்ஆனைத் தொடகூடாது என்ற

அழுத்தமான அர்த்தம் இவ்வசனத்தில்

உள்ளடங்கியுள்ளது.
நூல் – ஃதகீரா (1-238) ஆசிரியர்- கர்ராஃபீ

மனிதர்களில் தூய்மையானவர்கள் என்பதன் பொருள் :

* ஷிர்க் எனும் இணைவைப்பு, குஃப்ர் எனும் இறைமறுப்பு

இவ்விரண்டை விட்டும் நீங்கி உளத்தூய்மையுடன்

இருப்போர்.

* புலன்களுக்குத் தெரிகின்ற நஜீஸ் எனும் அசுத்ததை

விட்டும் உடல் தூய்மையாக இருப்போர்.

* ஹதஃத் எனும் சிறுதொடக்கு மற்றும்

பெருந்தொடக்கைவிட்டும் நீங்கிஇருப்போர்.

மேற்கண்ட வசனத்திலுள்ள வாசகம் வெளித்தோற்றத்தில்

செய்தி வடிவில் அமைந்திருந்தாலும் கட்டளை

வாக்கியமாகவே இங்கே கருதப்படும்.
நூல்கள் – தஃப்ஸீர் பஙவீ (5-301) தஃப்ஸீர் இப்னு கஃதீர்
(4-299)

ஹதீஃத்
1- عن حكيم بن حزام رضي الله عنه قال : لـما بعثني رسول الله صلى الله عليه وسلم الى اليمن قال : لاتمس القرآن الا وانت طاهر
رواه الحاكم فى المسدرك وقال : صحيح الاسناد ووافقه الذهبيز ورواه الدار قطني في سننه والطبراني فى الـمعجم الكبير

1. ஹகீம் இப்னு ஹிஜாம் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் :

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

அவர்கள் என்னை யமன் நாட்டிற்கு அனுப்பிய

சமயம் என்னிடம் கூறினார்கள். நீங்கள்

தூய்மையாக இருக்கும் போதுதான் குர்ஆனைத்

தொடவேண்டும்.

நூற்கள்: ஹாகிம்- எண்: 6066, தாரகுத்னீ - எண்: 386,

தப்ரானி(கபீர்)- எண்:3067

இந்த ஹதீஃதின் அறிவிப்பாளர் வரிசை நம்பகத்தன்மை

வாய்ந்ததென்று இமாம் ஹாகிம் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

மேலும் இந்த ஹதீஃதின் அறிவிப்பாளர் தொடர்

அழகியதென்று இமாம் ஹாஜிம் கூறுகின்ற கருத்தை

இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி தனது தல்கீஸ் ஹபீர்

என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

தல்கீஸ் ஹபீர் 1-131
2- عن عبد الله بن عمر رضي الله عنه قال : قال النبي صلى الله عليه وسلم : لايمس القرآن الا طاهر
رواه الدارقطني في سننه والطبراني فى الكبير والصغير والبيهقي فى السنن الكبرى

2.இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)

அவர்கள் மொழிந்தார்கள்.

பரிசுத்தமானவர் தான் குர்ஆனைத் தொட வேண்டும்.

அறிவிப்பாளர்- அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு

அன்ஹு

நூற்கள்: தாரகுத்னீ - எண்: 383, பைஹகீ/377 தப்ரானி

(கபீர்)- எண்:13049, தப்ரானி(ஸஙீர்)- எண்:1160

இந்த ஹதீதின் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள்.

நூல்; மஜ்மவு ஜவாயித் 1-276
3 – عن عثمان بن ابى العاص قال : وفدنا على رسول الله صلى الله عليه وسلم فوجدوني افضلهم اخذا للقرآن وقد فضلتهم بسورة البقرة فقال النبي صلى الله عليه وسلم : قد امرتك على اصحابك وانت اصغرهم ولا تمس القرآن الا وانت طاهر (رواه الطبراني فى الكبير)

3.உத்மான் இப்னு அபில் ஆஸ் ரலியல்லாஹு அன்ஹுஅவர்கள்

கூறுகிறார்கள்;

நாங்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி

வஸல்லம் அவர்களை சந்தித்தோம்.எங்களில்

குர்ஆனை நன்கு ஓதக்கூடியவனாக நானிருந்தேன்.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

அவர்கள் என்னிடம் சொன்னார்கள்;

நீர் சிறுவராக இருப்பினும் உம் கூட்டத்தினருக்கு

தலைவராக உம்மை நியமிக்கிறேன். நீர்

தூய்மையானவராக இருக்கும் போது தான் குர்ஆனைத்

தொடவேண்டும்.

நூல்: தப்ரானி (கபீர்)- எண்: 8255

இந்த ஹதீதின் அறிவிப்பாளர் தொடரில் வருகின்ற

இஸ்மாயில் இப்னு ராஃபிஃ என்பவர் பலவீனமானவர் என

யஹ்யா இப்னு மயீன் தெரிவித்தாலும் இமாம்

புகாரி அவர்கள் அவரை நம்பகமானவர் என உரைக்கிறார்கள்.

நூல்: மஜ்மவு ஜவாயித் 1-277
عن عبد الله بن ابي بكر بن محمد بن عمرو بن حزم عن ابيه عن جده قال: كان في كتاب النبي صلى الله عليه وسلم لعمرو بن حزم : لايمس القرآن الا على طهر. رواه مالك وابن حبان والدارمي والبيهقي والدارقطني

4. இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

அவர்கள் அம்ரு இப்னு ஹஜ்ம் ரலியல்லாஹு அன்ஹு

அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு இருந்தது:

‘தூய்மையான நிலையில் தான் குர்ஆனைத் தொட

வேண்டும்.’

அறிவிப்பாளர்- அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு

அன்ஹு

நூற்கள்: முஅத்தா-எண்:466, தாரமீ- எண்:2195, பைஹகீ-

எண்:376,

இமாம் தாரகுத்னீ அவர்களின் கூற்று:-

இதன் அறிவிப்பாளர்கள் நம்பகத்தன்மையுள்ளவர்கள்.

இமாம் பஙவீ அவர்களின் கூற்று:-
قال البغوي سمعت احمد بن حنبل وسئل عن هذا الحديث فقال : ارجو ان يكون صحيحا وقال ايضا : لا اشك ان رسول الله صلى الله عليه وسلم كتبه

இந்த ஹதீஃதின் நிலைபற்றி இமாம் அஹமத் இப்னு

ஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம்

வினவப்பட்ட போது, இது ஆதாரபூர்வமானது என்றே

கருதுகிறேன் என பதிலளித்த இமாம் அவர்கள் மேலும்

கூறினார்கள். இறைத்தூதர் ஸல்லலாஹு அலைஹி

வஸல்லம் அவர்கள் இதை எழுதினார்கள்

என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.

நூற்கள்- திப்யான்1-409 , இர்வாவுல் ஙலீல்1-161

இமாம் யஃகூப் இப்னு சுப்யான் அவர்களின் கூற்று:-
قال يعقوب بن سفيان : لا اعلم كتابا اصح من هذا الكتاب فان اصحاب رسول الله صلى الله عليه وسلم والتابعين يرجعون اليه ويدعون رأيهم

எனக்கு தெரிந்த இதைவிட சிறந்த கடிதம் எதுவுமில்லை.

ஏனென்றால், நபித்தோழர்களும் மற்றும் தாபியீன்களும்

தங்களுது சொந்த யூகங்ளைப் புறந்தள்ளிவிட்டு குர்ஆனைத்

தொடுவதற்கு சுத்தம் அவசியம் என்ற நிலைப்

பாட்டிலேயே இருந்தனர்.

நூல்: திப்யான் ஃபீ அக்ஸாமில் குர்ஆன்- பக்கம்:144

இமாம் ஹாகிம் அவர்களின் கூற்று:-
قال الحاكم : قد شهد عمر بن عبد العزيز والزهري لهذا الكتاب بالصحة

இறைத்தூதர் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்

அவர்கள் எழுதிய இக்கடிதம் ஆதாரபூர்வமானது என்று

உமர் இப்னு அப்தில் அஜிஸ் அவர்களும் ஜூஹ்ரீ

அவர்களும் சாட்சி பகர்ந்துள்ளனர்.

நூல்: ஹாகிம்: 1-397

இமாம் இப்னு அப்திர் பர்ர் அவர்களின் கூற்று:-

قال الامام ابن عبد البر : وكتاب عمروبن حزم هذا تلقاه العلماء بالقبول والعمل وهم عندهم اشهر واظهر من الاسناد الواحد المتصل

இறைத்தூதர் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்

அவர்களால் அம்ரு இப்னு ஹஜ்ம் அவர்களுக்கு

இக்கடிதத்தை இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் ஏற்று

அமல்படுத்தியுள்ளார்கள்.மேலும்,தொடர் வரிசையுள்ள

ஒரு வழித் தொடர் ஹதீஃத்தைவிட கடிதம் சம்பந்தப்பட்ட

இந்த ஹதீஃத் பிரபல்யமடைந்ததாகவும்

மிகவும் ஏற்கத்தக்கதாகவும் அவ்வ்றிஞர்களிடம் கருதப்பட்டது.

நூல்: இஸ்திஃத்கார் 8-10

சுன்னத் ஜமாஅத் கொள்கைக்கு முரண்பட்ட இப்னு

தைமியாவின் கூற்று:-
قال ابن تيمية : وهم كتاب مشهور عند اهل العلم.

இறைத்தூதர் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்

அவர்கள் எழுதிய இக்கடிதம் இஸ்லாமிய மார்க்க

அறிஞர்களிடம் பிரபல்யமுள்ளதாகும்.

நூல்: ஷரஹுல் உம்தா 1-382

Thazeem
Thazeem
New Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2
ஸ்கோர் ஸ்கோர் : 5034
Points Points : 1
வயது வயது : 42

http://www.asjratv.blogspot.com

Back to top Go down

வுழு இன்றி குர்ஆனை தொடலாமா Empty Re: வுழு இன்றி குர்ஆனை தொடலாமா

Post by முஸ்லிம் Tue Jul 27, 2010 6:20 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி.......:)
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10928
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum