அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்”

View previous topic View next topic Go down

அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்”

Post by முஸ்லிம் on Fri Sep 10, 2010 9:11 pmஇறைமறை இறங்கிய அருள்மிகு மாதம் இனிதே நிறைவடைந்து விட்டது. புனித ‘லைலத்துல் கத்ர்” இரவை தன்னுள் மறைத்து வைத்திருந்த மாதம் மறைந்து விட்டது. சைத்தான்கள் விலங்கிடப்பட்ட மாதம் அகன்றுவிட்டது. துஆக்கள் அங்கீகரிக்கப்பட்ட மாதம் கடந்து விட்டது. ஆம் புண்ணியம் பொழிந்த புனித மாதம் எம்மை விட்டு சென்று விட்டது. ஏக இறைவனின் அருளும், கருணையும் அதிகமதிகமாக சொரியும் அருள்மிகு மாதம் எமக்கு பல படிப்பினைகளையும் பயிற்சிகளையும் தந்து சென்றுள்ளது. இறையச்சத்தை ஏற்படுத்தவும் இறை திருப்தியை பெற்றுத் தரவும் ரமழான் எமக்கு வாய்ப்பளித்தது. அந்த அருள்மிகு ரமழான் எம்மை விட்டு பிரிந்துள்ளது. ஆம் ரமழான் மாதம் முழுவதும் நோன்பிருந்து ஷவ்வால் மதியின் வளர் பிறையை வானமதில் கண்டு முஸ்லிம்கள் ‘ஈதுல் பித்ர்” நோன்புப் பெருநாளை பெருமகிழ்வுடன் இனிதே கொண்டாடுகின்றனர்.

உலக முஸ்லிம்கள் உவந்து கொண்டாடும் உயர் நாட்களில் சிறப்பாகக் கொண்டாடும் பெருநாள் ஈகைத் திருநாளாகும். முஸ்லிம்களின் முதல் பெருநாளும் முக்கிய பெருநாளும் ஆகிய ‘ஈதுல் பித்ர்” பெருநாள் சமத்துவத்தை, சகோதரத்துவத்தை, சாந்தியை, சமாதானத்தை ஏற்படுத்தும் உன்னத நாளாக விளங்குகிறது.

இறை மறை கூறியபடியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்தபடியும் நோன்பு நோற்று அதன்படி ஒழுகியவர்களுக்கு இது அர்த்தள்ள பெருநாள் என்பதில் ஐயமில்லை. இந்த பெருநாள் தினத்தில் மகிழ்வுடன் இருக்கும் தினத்தில் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய பல விடயங்கள் உள்ளன. எமக்குள் உள்வாங்கிக் கொண்டு வாழ்நாள் முழுவதும் ஒழுக வேண்டிய அம்சங்கள் பல உள்ளன.

ஒரு மாதம் முழுவதும் பெற்ற பயிற்சிகள், அதனால் எம்மில் ஏற்பட்ட மாற்றங்கள் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தும் பேணப்பட வேண்டும். ஒரு மனிதன் இறை விருப்பத்தையும், இறைவனது நெருக்கத்தையும் அடையக் கிடைத்தால் அதுவே அவன் அடைந்த மிகப் பெய வெற்றியாக இருக்கும். அதுவே பெரிய பெருநாளாகும்.

இறைவன் மனிதனை படைத்ததன் நோக்கம் அவனுக்கு முற்றாக கீழ்படிவதற்காகும். அதற்காக வேண்டி அவன் தனது பணம், பொருள், குடும்பம் மற்றும் உலக விடயங்களை தியாகம் செய்வதன் மூலம் அவனால் உண்மையான பெருநாளை கண்டு கொள்ள முடியும். இதுவே நிரந்தரப் பெருநாளாகும்.

நோன்புப் பெருநாளை கொண்டாடும் இவ்வேளை, நாம் ரமழான் தந்த போதனைகளை மறந்து விடாமல் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். இஸ்லாம் ஒரு வாழ்க்கை முறையாகும். இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றான நோன்பு அந்த வாழ்க்கை முறைக்கான முக்கிய சில பயிற்சிகளை எமக்கு அளிக்கிறது.

நோன்பின் போது உடலையும் உள்ளத்தையும் கட்டுப்படுத்தி இருந்தது போல், இனிவரும் நாட்களிலும் உடலையும் உள்ளத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.இதன் மூலம் பூரண ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ள முடியும்.

தீய பழக்க வழக்கங்கள் மீண்டும் நம்மை கவ்விக் கொள்ளாமல் பாதுகாத்துக் கொள்வதோடு, நோன்புப் காலங்களில் ஐவேளை தொழுகையோடு சுன்னத் தொழுகைகள், தஹஜ்ஜத் தொழுகைகளை தொழுதது போல் தொடர்ந்தும் தொழுது வர வேண்டும். ஏழைகளின் பசிப்பிணியை உணர்ந்து ஏழைகளுக்கு நோன்புக் காலங்களில் உதவியது போல் தொடர்ந்தும் உதவிகள் செய்து வர வேண்டும்.

ஸகாத், சதக்கா, ஸக்காத்துல் பித்ரா போன்றவைகளை கொடுக்க வேண்டும். ஸக்காத் பெறத் தகுதியுடைய எட்டுக் கூட்டத்தாருக்கும் கொடுக்க வேண்டும். பெருநாள் தினத்தில் புத்தாடைகள் அணிவது போல், ‘தக்வா” என்ற இறையச்சம் எனும் ஆடையை தொடர்ந்து அணிந்திருப்பவர்களாக ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்.

பள்ளிவாசல்களிலேயே தோளோடு தோள் முட்ட வாஞ்சையோடு எப்படி தொழுதோமோ, அதேபோல் பள்ளிவாசல்களில் மட்டுமல்லாது, எல்லோரையும் நமது சகோதரர்களாக கருதவேண்டும். போட்டி, பொறாமை, கோபதாபங்களை விட்டொழித்து ஒருவருக்கொருவர் ‘ஸலாம் கூறி பழையனவற்றை மறந்து விட வேண்டும். இவ்விடயத்தை பெருநாள் தினத்தில் அதற்கு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இஸ்லாம் சாந்தியையும், சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்துகிறது.

இன்று எம்மத்தியிலும் உலகளாவிய ரீதியிலும் முஸ்லிம்களிடையே பல்வேறு பிரிவுகளும், பிரிவினைகளும் உள்ளன. அதன் காரணமாக முஸ்லிம்களிடையே சாந்தியும் சமாதானம் ஒற்றுமையும் இல்லாமற் போயுள்ளது. இவ் விடயம் தொடர்பில் நாம் அதிகமதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு முஸ்லிம் அல்குர்ஆன் கூறுகின்ற வழியிலும், நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்தபடியும் வாழ்ந்தால் முஸ்லிம்களுக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் வெற்றியே கிடைக்கும். இந்த பெருநாளை அடைவதற்காக கஸ்டங்களை அனுபவிக்க வேண்டும். தியாகம் செய்ய வேண்டும். அதுவரையில் நாம் ஓயக்கூடாது.

தக்பீர் ஓசை இறைபள்ளிவாசலில் முழங்க, புத்தாடை அணிந்து, நறுமணம் பூசி, அறுசுவை உணவு சமைத்து ஒருவருக்கொருவர் ஆரத் தழுவி பெருநாள் வாழ்த்துக் கூறி பெருங்களிப்புடன் பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்நாளில் நோன்பு கற்றுத் தந்த படிப்பினையை மனதில் இருத்தி வாழ் நாள் முழுவதும் அதன்படி நடப்போமாக…. ஈத் முபாறக்..

நன்றி சகோதரர் சுகைப்."உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
மதிப்பெண் மதிப்பெண் : 8603
மதிப்பீடு மதிப்பீடு : 42
வயது வயது : 29
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum