தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மூன்றாவது வாரத்தை கடந்த ‘வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு’ போராட்டம்

Go down

மூன்றாவது வாரத்தை கடந்த ‘வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு’ போராட்டம்  Empty மூன்றாவது வாரத்தை கடந்த ‘வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு’ போராட்டம்

Post by முஸ்லிம் Sat Oct 08, 2011 6:05 pm

மூன்றாவது வாரத்தை கடந்த ‘வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு’ போராட்டம்  Wallstreet_bailout_protest-April-2011-270x170நியூயார்க்:அமெரிக்காவில்
‘வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு’ போராட்டம் மூன்றாவது வாரமாகத் தொடர்கிறது.
நியூயார்க் மட்டுமல்லாமல் தற்போது நாடு முழுவதும் போராட்டம் பரவி வருகிறது.

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நிதி
நெருக்கடியால் அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி
வருகிறது. அதனால் ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். 2008ல் ஏற்பட்ட
பொருளாதார நெருக்கடியின் பாதிப்பு இன்னும் முற்றிலுமாக நீங்காத நிலையில்
மற்றொரு அறுவை சிகிச்சைக்கு அமெரிக்க மக்கள் தயாராக இல்லை. இதனை எதிர்த்து
மக்கள் போராடி வருகின்றனர்.

நேற்று நியூயார்க், பாஸ்டன், லாஸ்
ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள்
நடந்தன. ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுவதும் பரவ வழி செய்யும் வகையில்
பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தும்படி தொடர்
ஆக்கிரமிப்பு இணையதளம் அறிவுறுத்தியுள்ளது.

நியூயார்க்கில் நேற்று முன்தினம் நடந்த
ஆர்ப்பாட்டத்தில் பெரிய நிறுவனங்களில் வேலை இழந்தவர்களும் போராட்டங்களில்
குதித்துள்ளனர். இவர்களுடன் கல்லூரி மாணவர்களும், பல்வேறு
தொழிற்சங்கங்களும் பங்கேற்றுள்ளனர்.

அமெரிக்கப் பத்திரிகைகள் இந்த
ஆர்ப்பாட்டங்களைப் பற்றி தரக் குறைவான விமர்சனங்களை வாரித் தெளிக்கின்றன.
ஆர்ப்பாட்டங்கள் பற்றி அடக்கி வாசிக்கின்றன. அதேநேரம் அமெரிக்கா
மட்டுமின்றி உலகளாவிய சிந்தனையாளர்கள் வட்டாரத்தில் இவை பெரும் ஆதரவு
பெற்று வருகின்றன.

நியூயார்க்கின் ஜூகோட்டி பூங்காவில்
நூற்றுக்கணக்கான மக்கள் தங்கியுள்ளனர். இவர்கள் தங்களுக்கான அடிப்படைத்
தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்கின்றனர். இங்கிருந்தபடியேதான்
அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படுகின்றன. எகிப்து புரட்சிக்கும்
இப்போராட்டத்திற்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம் எகிப்து புரட்சி, நாட்டின்
தலைமையை எதிர்த்து நடந்தது. இப்போதைய அமெரிக்க போராட்டம் நிதி சீர்கேட்டை
எதிர்த்து நடக்கிறது.




மூன்றாவது வாரத்தை கடந்த ‘வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு’ போராட்டம்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10951
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» இறுதி எச்சரிக்கையை புறக்கணித்து வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு எதிர்ப்பாளர்கள் தொடர் போராட்டம்
» மோடியின் போராட்டம் நீதியின் போராட்டம் அல்ல, அது அநீதியின் போராட்டம் – சமூக ஆர்வலர் மல்லிகா சாராபாய்
» நிதிச் சீர்திருத்தம் செய்யக் கோரி வால் ஸ்ட்ரீட்டை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கனக்கான அமெரிக்கர்கள்
» வகுப்புவாத கலவரத்தில் கடந்த 3 ஆண்டுகளில் கொல்லப்பட்டவர்கள் 427 பேர்
» 10ஆம் வகுப்பு தேர்ச்சி- கடந்த ஆண்டைவிட 2.8 சதவீதம் அதிகம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum