தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இஸ்ரேலின் ஜனநாயக அமைப்பை குறித்து ஹிலாரிக்கு கவலை!

Go down

இஸ்ரேலின் ஜனநாயக அமைப்பை குறித்து ஹிலாரிக்கு கவலை!  Empty இஸ்ரேலின் ஜனநாயக அமைப்பை குறித்து ஹிலாரிக்கு கவலை!

Post by முஸ்லிம் Tue Dec 06, 2011 9:26 pm

வாஷிங்டன்:அரசு சாரா நிறுவனங்களை
கட்டுப்படுத்தும் முயற்சிகள், பெண்களுக்கு எதிரான பாரபட்ச நடவடிக்கைகள்
நிலவுவது இஸ்ரேலின் ஜனநாயக அமைப்பைக் குறித்து கவலையை எழுப்புவதாக அமெரிக்க
வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகையில் இஸ்ரேல் குறித்த கவலையை அவர் வெளியிட்டார்.

இடதுசாரிகள் ஆதரவு அரசு சாரா அமைப்புகளை
கட்டுப்படுத்துவதற்கு இஸ்ரேல் அரசு கொண்டுவந்துள்ள சட்ட திருத்தம்,
பேருந்துகளிலும், பொது இடங்களிலும் பெண்கள் மீது நடத்தப்படும் பாரபட்சங்கள்
ஆகியவற்றை சுட்டிக்காட்டி, ஹிலாரி இஸ்ரேலின் தீவிர பழமை வாதிகள் தலைமை
வகிக்கும் நெதன்யாகு அரசின் நடவடிக்கைகளை விமர்சித்தார்.

இஸ்ரேல் குறித்த ஹிலாரியின் விமர்சனங்களை
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பெயர் வெளியிட விரும்பாத உயர்
அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ளார். இவ்வறிக்கை வெளியானதை தொடர்ந்து இஸ்ரேல்
அமைச்சர்கள் ஹிலாரிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சொந்த நாட்டின்
பிரச்சனைகளை சீராக்கிய பிறகு பிற நாடுகளின் பிரச்சனைகளில் தலையிட்டால்
போதும் என ஹிலாரிக்கு இஸ்ரேல் சுற்றுச்சூழல் அமைச்சர் கிலாத் எர்தன்
பதிலளித்துள்ளார்.


இஸ்ரேலின் ஜனநாயக அமைப்பை குறித்து ஹிலாரிக்கு கவலை!  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10929
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum