தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

துப்பாக்கியால் சுட்டு சிறுவன் கொலை!

Go down

துப்பாக்கியால் சுட்டு சிறுவன் கொலை!  Empty துப்பாக்கியால் சுட்டு சிறுவன் கொலை!

Post by முஸ்லிம் Mon Jul 04, 2011 4:28 pm

சென்னை இராணுவ அதிகாரிகள் குடியிருப்பில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில், தலையில் குண்டு பாய்ந்து தில்சன் என்ற சிறுவன் ஒருவன் பரிதாபமாக இறந்துபோனான். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை தீவுத்திடல் அருகே கொடிமரச்சாலையில் ராணுவ அதிகாரிகள் குடியிருப்பு உள்ளது. இது தடை செய்யப்பட்ட பகுதியாகும். அன்னியர்கள் யாரும் எளிதில் நுழையமுடியாது. இந்த குடியிருப்பை சுற்றி 6 அடி உயரத்தில் மதில் சுவர் எழுப்பி அதற்கு மேல் இரும்புகம்பி வலைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குடியிருப்பு அருகே காந்தி நகர், எஸ்.எம்.நகர் குடிசைவாழ் மக்கள் வசிக்கும் பகுதி உள்ளது. இங்குள்ள சிறுவர்கள் ராணுவ அதிகாரிகள் குடியிருப்புக்குள் மதில் சுவர் ஏறி குதித்து அங்கு மாமரங்களில் காய்த்து தொங்கும் மாங்காய்களை பறிப்பது, வாதாம் மர கொட்டைகளையும் பொறுக்கி வருவது வழக்கம். அவ்வாறு செல்லும் சிறுவர்களை அங்கு காவல்காக்கும் ராணுவ வீரர்கள் பிடித்து வைத்துவிட்டு பின்னர் எச்சரித்து விடுதலை செய்வது வழக்கம். ஞாயிற்றுக் கிழமையன்றும் சிறுவர்கள் இதுபோன்ற விளையாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் ராணுவ அதிகாரிகள் குடியிருப்புக்குள் அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் தில்சன், சஞ்சய், பிரவீன் ஆகியோர் வழக்கம்போல மதில் சுவர் ஏறி குதித்துள்ளனர். மதில் சுவர் ஓரமாக நின்ற வாதாம் மரத்தில் ஏறி அதிலுள்ள காய்களை பறித்துள்ளனர். அப்போது அங்கு காவல் காத்த ராணுவ வீரர் ஒருவர் சிறுவர்களை விரட்டியுள்ளார். உடனே சிறுவர்கள் மரத்தில் இருந்து குதித்து மதில் சுவரில் தாவி ஏறியுள்ளனர்.

அப்போது அந்த சிறுவர்கள் மீது ராணுவ அதிகாரிகள் குடியிருப்பில் இருந்து யாரோ துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் சிறுவன் தில்சன் தலையில் குண்டுபாய்ந்து துளைத்து சென்றுவிட்டது. படுகாயமடைந்த அவன் சுருண்டு விழுந்தான்.

இதைப் பார்த்த மற்ற 2 சிறுவர்களும் கூச்சல் போட்டனர். தகவல் தெரிவித்து எஸ்.எம்.நகர் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டுவந்தனர். சிறுவன் தில்சனை ரத்தம் சொட்ட, சொட்ட அரசு பொது மருத்துவமனைக்கு ஆட்டோவில் தூக்கிச்சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் தில்சனை சிகிச்சைக்கு சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள்.

சிகிச்சை பலன் அளிக்காமல் மாலை 5 மணியளவில் சிறுவன் தில்சன் பரிதாபமாக இறந்துபோனான். அவனது தந்தை பெயர் குமார். தாயார் கலைவாணி. தில்சன் இவர்களுக்கு இரண்டாவது மகன் ஆவான். குமார் கூலித்தொழிலாளி ஆவார். இந்த சம்பவம் சென்னை நகரையே உலுக்கிவிட்டது.

இதுபற்றி தகவல் கிடைத்தவுடன், மாநகர காவல் ஆணையர் திரிபாதி, கூடுதல் ஆணையர்கள் தாமரைக்கண்ணன், சஞ்சய் அரோரா, இணை ஆணையர்கள் செந்தாமரைக்கண்ணன், சண்முகராஜேஸ்வரன், சங்கர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தை பார்வையிட்டனர். சிறுவன் தில்சனின் தலையை துளைத்து சென்ற துப்பாக்கிகுண்டையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர் யார் என்பதை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. காவலர்களும் ராணுவ அதிகாரிகளும் இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிப்பார்கள். சுட்டது யார்? என்று உறுதி செய்யப்பட்டவுடன் ராணுவ அதிகாரிகள் கொடுக்கும் அறிக்கை அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்படும். துப்பாக்கியால் சுட்ட நபர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படும். எந்த வகையான துப்பாக்கியால் சுடப்பட்டது என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது என்று வடசென்னை காவல் இணை ஆணையர் செந்தாமரைக் கண்ணன் கூறியுள்ளார்.


இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10950
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
»  காஷ்மீரில் சகோதரிகள் சுட்டு கொலை !
» பள்ளிக் குழந்தைகளை கடத்தி கொன்ற மோகன்ராஜ் என்கவுன்‌டரில் சுட்டு கொலை, இன்று அதிகாலை கோவையில் நடந்த சம்பவம் முழு விவரம்
» கோடீஸ்வரனான ஐந்து வயது இந்திய சிறுவன்
» எல்லையில் அத்துமீறிய அமெரிக்க உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்
» சிறுவன் உட்பட 5 பலஸ்தீனர்கள் கைது: ஆக்கிரமிப்புப் படை அராஜகம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum