தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஈரானிய பல்கலைக்கழ​கத்தின் பேராசிரியர் தீவிரவாதிக​ளால் படுகொலை

Go down

ஈரானிய பல்கலைக்கழ​கத்தின் பேராசிரியர் தீவிரவாதிக​ளால் படுகொலை   Empty ஈரானிய பல்கலைக்கழ​கத்தின் பேராசிரியர் தீவிரவாதிக​ளால் படுகொலை

Post by முஸ்லிம் Mon Jul 25, 2011 3:16 pm

டெஹ்ரான்:ஈரானிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் அடையாளம் தெரியாத தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார் என்று ஈரானிய போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

தர்யூஷ் ரெஜயி நிஜாத்தும் (Daryoush Rezaienejad) (வயது 35) அவரது மனைவியும் அவர்களது குழந்தையின் பாலர் பள்ளிக்கு செல்லும் வழியில் துப்பாக்கி ஏந்திய இரண்டு நபர்கள் மோட்டார் பைக்கில் இருவரையும் அணுகினார்கள். அவர்கள் தர்யூஷ் ரெஜயி நிஜாத்தை பெயர் கூறி அழைத்ததும் தர்யூஷ் ரெஜயிநிஜாத் திரும்பிப் பார்த்த மறு கணம் அவரது கழுத்தில் சுட்டனர்.

ரெஜயி நிஜாத்திற்கு உதவி கோரி ஓடிய அவரது மனைவியையும் துரத்தி ஓடினர் அந்த கொலைகாரர்கள். அப்பெண்மணி தற்பொழுது மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

எந்த ஒரு அமைப்போ அல்லது தனி நபரும் இந்த நிகழ்விற்கு இதுவரை பொறுப்பு ஏற்றுக் கொள்ள்வில்லை.

ஆரம்பத்தில்,உள்ளூர் ஈரானிய ஊடகங்கள், தர்யூஷ் ரெஜயி நிஜாத் ஒரு அணு இயற்பியல் விஞ்ஞானி என தகவல்கள் தெரிவித்தன. இந்தக் குழப்பத்திற்கான மூலக்காரணம், அவரது பெயரும் அணு இயற்பியல் விஞ்ஞானி தர்யூஷ் ரெஜாயி (Daryoush Rezaei) யின் பெயருக்கும் இடையே உள்ள ஒற்றுமைதான் காரணம்.

ரெஜயி நிஜாத், ஈரானிய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை பார்த்து வந்தார் என்று உள்ளூர் வட்டார்ங்கள் சொல்கின்றன.

நவம்பர் 29, 2010 அன்று, இரண்டு பிற ஈரானிய கல்வியாளர்கள் பயங்கரவாத தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் தெஹ்ரானில் வெவ்வேறு இடங்களில் டாக்டர் மஜித் ஷஹ்ரியாரி மற்றும் பேராசிரியர் ஃபெரைய்தூன் அப்பாஸி இருவரையும் கொல்வதற்காக அவர்களது வாகனங்களில் குண்டுகள் வெடிக்கச் செய்தனர். ஷஹ்ரியாரி உடனடியாக கொல்லப்பட்டார். ஆனால் அப்பாஸி மற்றும் அவரது மனைவி இருவரும் காயமடைந்தார்கள்.

இந்த சம்பவத்திற்கு மொசாத், சிஐஏ மற்றும் எம்ஐ உளவு நிறுவங்கள்தாம் காரணம் அல்லது பங்கு உள்ளது என்று டிசம்பர் 2 அன்று, ஈரானிய புலனாய்வு அமைச்சகம் அறிவித்தது.

இதற்கிடையில், மார்ச் 2007 இல் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் அப்பாஸி அவர்கள் ஒரு “அணு விஞ்ஞானி” என தீர்மானம் 1747 மூலம் ஏற்கப்பட்டது. இதனால் படுகொலைக்கு பின்னால் உள்ள குற்றவாளிகளால் யார் என்றால் ஐ.நா. தீர்மானத்தில் பேராசிரியரின் பெயரைச் சேர்க்கப்படுவதற்கு காரணமாக இருந்தவர்கள்தாம் என்பதை கண்டறிந்து விட முடியும் என்றும் இஸ்லாமிய குடியரசு மேற்கோள் காட்டுகின்றது.


ஈரானிய பல்கலைக்கழ​கத்தின் பேராசிரியர் தீவிரவாதிக​ளால் படுகொலை   Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10933
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஈரானிய அறிஞர்கள் படுகொலைக்கு எதிரான மனு(Petition)
» அலிகார் முஸ்லிம் பல்கலைகழகத்தின் மூத்த பேராசிரியர் டாக்டர் குர்ஷித் அவர்களுக்கு பிரதமர் விருது
» மத்தியபிரதே​ச மாநிலத்தில் பயங்கரமான வெடிப்பொரு​ட்கள் பறிமுதல் – ஹி​ந்துத்துவா தீவிரவாதிக​ள் தாக்குதல் நடத்த திட்டமா?
» ஈரான் அணுவிஞ்ஞானி படுகொலை
» அமைதிப் பேரணியினர்மீது தாக்குதல்: ஆறு பேர் படுகொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum