தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

காஸ்ஸாவில் இஸ்ரேல் தாக்குதல்:6 ஃபலஸ்தீனர்கள் படுகொலை

Go down

காஸ்ஸாவில் இஸ்ரேல் தாக்குதல்:6 ஃபலஸ்தீனர்கள் படுகொலை   Empty காஸ்ஸாவில் இஸ்ரேல் தாக்குதல்:6 ஃபலஸ்தீனர்கள் படுகொலை

Post by முஸ்லிம் Fri Aug 26, 2011 9:01 pm

காஸ்ஸா:அதிகாரப்பூர்வமற்ற போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் காஸ்ஸாவில் தாக்குதலை தொடர்கிறது.

நேற்று அதிகாலை நடத்திய பல்வேறு தாக்குதல்களிலும் ஐந்து ஃபலஸ்தீன் முஸ்லிம்கள் படுகொலைச் செய்யப்பட்டனர். இருபதுக்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டது.

புதன்கிழமை மாலை நடந்த தாக்குதலில் இஸ்லாமிக் ஜிஹாத் போராளி இயக்கத்தின் உறுப்பினர் இருபது வயதான அத்தியா முகாத் கொல்லப்பட்டிருந்தார்.

இன்னொரு தாக்குதலில் 34 வயதான இஸ்மாயீல் அல் உஸ்மான் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலை உறுதிச்செய்த இஸ்ரேல் கொல்லப்பட்டவர்கள் வன்முறையாளர்கள் என கூறுகிறது.

போர்நிறுத்தத்தை மீறிய இஸ்ரேல் நடவடிக்கையில் தலையிட ஐ.நாவுக்கு ஹமாஸ் அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் நிரூபிப்பது சமாதானத்தை அவர்கள் விரும்பவில்லை என்பதையே. ஃபலஸ்தீன் மக்களை கொன்றொழிக்கும் நடவடிக்கையிலிருந்து இஸ்ரேலை வாபஸ் பெறச்செய்ய சர்வதேச சமூகம் களமிறங்க வேண்டும் என ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளது.


காஸ்ஸாவில் இஸ்ரேல் தாக்குதல்:6 ஃபலஸ்தீனர்கள் படுகொலை   Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10938
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum