தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அமெரிக்க தாக்குதலில் பாக்.ராணுவத்தினர் 28 பேர் பலி! பதற்றம்

Go down

அமெரிக்க தாக்குதலில் பாக்.ராணுவத்தினர் 28 பேர் பலி! பதற்றம்  Empty அமெரிக்க தாக்குதலில் பாக்.ராணுவத்தினர் 28 பேர் பலி! பதற்றம்

Post by முஸ்லிம் Sun Nov 27, 2011 7:39 pm

இஸ்லாமாபாத்,
: அமெரிக்காவின் ராணுவத்தின் திடீர் தாக்குதலில் பாக்.ராணுவத்தினர் 28
பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அங்கு பெரும் கொந்தளிப்பை
ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அதிபர் கிலானி அமெரிக்க படைகளுக்கான
உணவு, மருந்து சப்ளை உட்பட அனைத்தையும் நிறுத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.





பாகிஸ்தானின்
வடமேற்கில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் தலிபான் மற்றும்
அல்&கய்தா தீவிரவாதிகளை குறி வைத்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ
படைகள் திடீர் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்கா
தலைமையிலான நேட்டோ படைகள் ஹெலிகாப்டர்கள் மூலம் குண்டு வீசி நடத்திய
தாக்குதலில் பாக். ராணுவ வீரர்கள் 28 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி
உள்ளனர் மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதனால்
பாகிஸ்தானில் பெரும் கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


பாகிஸ்தானின் பேசாய் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் சோதனை சாவடி உள்ளது.
அங்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட ராணுவவீரர்கள் தங்கியிருந்தனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து தலிபான் தீவிரவாதிகளை குறிவைத்து தாக்க நேட்டோ
படையின் ஹெலிகாப்டர்கள் புறப்பட்டன. பேசாய் சோதனை சாவடி மீது அவை திடீரென
குண்டு மழை பொழிந்தன. தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர்களில் இருந்து சோதனை
சாவடியை நோக்கி வீரர்கள் சரமாரி துப்பாக்கி சூடும் நடத்தினர்.

இந்த சம்பவத்தில் பாகிஸ்தான் வீரர்கள் 28 பேர் சம்பவ இடத்திலேயே
பலியாகினர். மேலும், 15 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களில்
பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. எனவே, பலியானவர்களின் எண்ணிக்கை
அதிகரிக்கும் என தெரிகிறது. இந்த தாக்குதலால் பாகிஸ்தானில் கொந்தளிப்பான
சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் வீரர்கள் 28பேர் பலியானதை அறிந்ததும்,
எல்லை வழியாக ஆப்கனில் நேட்டோ படையினருக்கு அனுப்பப்படும் உணவு, மருந்து
போக்குவரத்தை உடனடியாக நிறுத்த பாகிஸ்தான் பிரதமர் கிலானி உத்தரவிட்டார்.

நேட்டோ படைகளின் இந்த குண்டுவீச்சு குறித்து எந்த கருத்தையும் அமெரிக்கா
இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10928
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum